News Update :
Home » » புது வீடு கட்ட ரூ.85 லட்சம் கோரிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்!

புது வீடு கட்ட ரூ.85 லட்சம் கோரிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்!

Penulis : karthik on Wednesday, 18 April 2012 | 09:47



புதுவீடு கட்டுவதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மத்திய அரசிடம் ரூ.85  லட்சம் கேட்டதாக அவர் மீது மேலும் ஒரு புகார் கிளம்பியுள்ளது. 

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் 25-ம்  தேதியுடன் முடிவடைகிறது.
 
� ��ய்வு பெற்ற பிறகு பிரதிபா பாட்டீல், புனேவில் புதிய பங்களாவில் குடியேற முடிவு  செய்துள்ளார்.இதற்காக அவருக்கென பிரத்யேகமாக புதிய வீடு கட்டப்படுகிறது.இதற்காக   ராணுவ நிலத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. 

அவருக� �கு விதிமுறைகளின்படி ஒதுக்கப்படவேண்டிய நிலத்தை விட, ஆறு மடங்கு  அதிகமாக ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின்  கீழ் தெரிய வந்துது. 

இந்நிலையில் புதிய பங்களா கட்ட தனக்கு ரூ.85 லட்சம் அரசு பணத்தை தர வேண்டும்  என்று ப� ��ரதிபா பாட்டீல் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதிய தகவலும் தற்போது தெரிய  வந்துள்ளது. 
 
ஆனால் பிரதிபாவின் இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் அதை ஏற்கவில்லை.  ஓய்வு பெறும் ஜனாதிபதிக்கு வீடு கட்ட ரூ.20 லட்ச ம் மட்டுமே தர முடியும் என்று  கூறிவிட்டது. 

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய  அரசு பணம் கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.

பிரதிபா பாட்டீல் சர்க்கரை ஆலை உள்பட பல தொழிற்சாலைகள் வைத்துள்ளார்.  பணக்காரரான அவர் வீடு கட்ட மத்திய அரசிடம் பணம் கேட்டது பலருக்கும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜனாதிபதி பதவி வகித்தவர்களில் அரசு பணத்தை அதிக அளவில் செலவழித்தது  இவர்தான் என்று ஏற்கனவே பல தடவை சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.





Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger