சென்னை நெற்குன்றத்தில் வசித்து வந்த நகை கடை அதிபர் கணேஷ்ராம் கடந்த 14-ந்தேதி அவரது கடையில் வைத்தே கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணேஷ்ராம் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்ணிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதில் முன்னேற்றம் ஏற்பட்டது போல தெரிந்தது. அவர் கூறிய தக� �ல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கணேஷ்ராம் கொலையில் எதிர்பார்த்த அளவுக்கு துப்பு துலங்க வில்லை.
காதல் தகராறு காரணமாக கொலை நடந்ததா? 1 கிலோ நகை பிரச்சினையில் கணேஷ்ராம் கொல்லப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கொலையாளி யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியாமலேயே உள்ளது.
கணேஷ்ராமின் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிக்கிய வாலிபர்தான் கொலையாளி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் அந்த வாலிபர் யார்? என்பது பற்றி தீவிரமாக துப்பு துலக� ��கி வருகிறார்கள். வாலிபரின் போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டோவை பழைய குற்றவாளிகளின் போட்டோவுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்வதற்காக செல்போன் எண்களும் வெளியிடப்பட்டன. ஆனால் வாலிபர் பற்றி யாரும் துப்பு கொடுக்கவில்லை. இதனால் கொலையாளியை கண்டு பிடிப்பதில் பின்னடைவு எற்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொலையாளி பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். கணேஷ்ராம் கொலை செய்யப்பட்ட அன்றே கொலையாளியின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டனர். ஆனால் அதில் துப்பு துலங்காததால், இன்று கொலையாளியின் வீடியோ படங்களை வெளியிட்டுள்ளனர்.
கணேஷ்ராமை கொலை செய்ய தயாராகும் கொலையாளி கடைக்குள் நுழைவது முதல்... கணேஷ் ராம் கொலையுண்டு கிடந்த லாக்கர் அறைவரை அவனது நடமாட்டம் அதில் பதிவாகி உள்ளது. ஆனால் கணேஷ்ராம் கொலை செய்யப்படும் காட்சி அதில் இடம் பெறவில்லை. லாக்கர் அறையின் வாசல் வரைதான் கேமராவின் பார்� ��ைபட்டுள்ளது.
Post a Comment