சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் சை� �ை துரைசாமி தலைமையில் நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
சுபாஷ் சந்திரபோஸ் (தி.மு.க.):- சென்னையில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
மேயர் சைதை துரைசாமி:- பன்றிக்காய்ச்சல் பரவும் முறை, இதற்கான அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 120 பள்ளி, 8 கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 28 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது கண்பிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் மஞ்சள், மிளகு, சோற்று கற்றாலை, பூண்டு, சிறிய வெங ்காயம் ஆகிய ஐந்தையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது.
ஜானகிராமன் (அ.தி. மு.க.)- துரைப்பாக்கம் பகுதியில் குப்பைகளை லாரியில ் மூடாமல் எடுத்து செல்வதால் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது.
மேயர்:- அவ்வாறு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகுமார்பாபு (அ.தி.மு,க.)- 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.
மேயர்:- இது முதல்வரின் கவனத்தில் உள்ளது. பரிசீலித்து முடிவு எடுப்பார்.
தமிழ்ச்செல்வன் (காங்):- மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன் இந்தியும் கற்று தர வேண்டும்.
மேயர்:- அரசின் கொள்கை முடிவுகள் பற்றி இங்கு பேச வேண்டாம்.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
சென்னை பள்ளிகளில் ஏற்கனவே 69 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்விக்கு வசதியாக இத்� ��ிட்டத்தை மேலும் விரிவுபடுத்தி இந்த ஆண்டு கூடுதலாக 30 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும். சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தொழில்வரி சீராய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொழில் வரி அரையாண்டுக்கு ரூ.100 முதல் ரூ.1,095 வரை வசூலிக்கப்படும். சென்னை மாநகரில் செயல்பட்டு வர� ��ம் நகை கடை மற்றும் பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா பொருத்தினால்தான் லைசென்சு புதுப்பிக்கப்படும். சரியாக பராமரிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவாதத்தின்போது கடந்த மாநகராட்சி நிர்வாகத்தில் மாநகராட ்சி பள்ளிகளில் சென்னை பள்ளிகள் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசு பெயர் மாற்றம் செய்ததாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கண்ணிய குறைவாக பேசியதாக கூறி தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். அவர்களை மேயர் சமாதானப்படுத்தி அறிவுர� � வழங்கினார்.
அப்போது அவர் கூறும்போது, ''மன்ற விதி எல்லோருக்கும் பொதுவானது. தி.மு.க.வினர் திட்டமிட்டு காரணங்களை தேடிப்பிடித்து வெளிநடப்பு செய்கிறார்கள். நீங்களும் அவர்களை போல் நடந்துக் கொள்ளக்கூடாது. தி.மு..கவினர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் மன்றம் அமைதியாக நடக்கக் கூடாது என்று தி.மு.க. வினர் த� �ட்டமிட்டு ஏதாவது செய்கிறார்கள். எனவே நீங்கள் கூட்டத்தில் அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் எழுந்து நின்று பேசுவது இதுவே கடைசியாக இருக் கட்டும்'' என்றார்.
Post a Comment