News Update :
Home » » அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சிகளை புறக்கணிதத்தின் பின்னணி

அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சிகளை புறக்கணிதத்தின் பின்னணி

Penulis : karthik on Wednesday, 18 April 2012 | 23:07



தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கடந்த 15-ந்தேதி காலை தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தினார். அன்று மாலை மின் கட்டண உயர்வ� �� கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டத்திலும் பேசினார். 

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தவிர மற்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிகளை மத்திய மந்திரியும், தென்மண்டல தி.மு.க. அமைப்புச்செயலாளருமான மு.க.அழகி� ��ியின் ஆலோசனையின்படி தி.மு.க. நிர்வாகிகள் புறக்கணிப்பு செய்ததாக தகவல் வெளியானது. 

இதனிடையே கட்சி நிர்வாகிகள் தி.மு.க. இளைஞர் அணி நேர்காணலுக்கு சென்ற பல இளைஞர்களை போகவிடாமல் தடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத மதுரை நகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலி� ��்கம், மன்னன், ஜெயராஜ் மாவட்ட துணைச்செயலாளர்கள் சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், பொன்சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டிய ராஜன், முபாரக் மந்திரி, முருகன், ராமலிங்கம் ஆகிய 17 பேர்களுக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. 

அந்த நோட்டீசில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்? இளைஞர் அணி நேர்காணலுக்கு சென்ற இளைஞர்கள் பலரை தடுத்தீர்களா? இது தொடர்பாக 7 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக பதில் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த நோட்டீசை பெற்ற தி.மு.க. நிர்வாகிக ள் 17 பேரும் தி.மு.க. தலைமைக்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளனர். மத்திய மந்திரி மு.க.அழகிரி நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை வருகிறார். அப்போது அவரிடம் இதுதொடர்பாக முறையிடவும் முடிவு செய்துள்ளனர். 

மு.க.அழகிரியின் ஆலோசனையை பெற்று நோட்டீசிற்கு பதில் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித� ��தும் முடிவு செய்கிறார்கள். இதுதொடர்பாக தி.மு.க. பகுதி செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது:- 

பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் மதுரையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 10-ந்தேதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், மத்திய மந ்திரி மு.க.அழகிரி வெளிநாட்டில் இருக்கும் நேரத்தில் இளைஞர் அணி நேர்காணல் நிகழச்சியை மதுரையில் நடத்த வேண்டுமா? என்று கேட்டோம்.

கட்சி மேலிடம் தேதியை அறிவித்து விட்டது என்று மாவட்ட செயலாளர் தளபதி கூறினார். அப்படி என்றால் முறைப்படி மத்திய மந்திரி மு.க.அழகிரியின் பெயரை அழைப்பிதழில ் போட வேண்டும் என கேட்டோம். ஆனால் இரு நிகழச்சிகளிலும் மு.க.அழகிரியின் பெயர் போடப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. 

தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வரும் மு.க.அழகிரியின் பெயரை போடாததால் இரு நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க வ ேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் மட்டும் அல்ல மதுரை மாநகரில் உள்ள 72 வட்டக்கழக செயலாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் யாருமே அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. 

தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. எந்த கட்சியிலும் உள்கட்சி பிரச்சினைகள் ஏற்படு வது சகஜம். இதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீசிற்கு அண்ணன் மு.க.அழகிரியின் ஆலோசனைகளை பெற்று பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

அவ� �த்தலைவர் இசக்கி முத்து உள்பட நிர்வாகிகள் அனைவரும் இதே கருத்தை தெரிவித்ததுடன், கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீசை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினர். இந்த விவகாரம் மதுரை மாநகர் தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger