News Update :
Home » » மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற்றார்

மதுரை இளைய ஆதீனமாக ரஞ்சிதாவின் நித்யானந்தா பதவியேற்றார்

Penulis : karthik on Sunday 29 April 2012 | 03:01




பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நட� ��்தி வருபவர் நித்யானந்தா. இவரை மதுரை ஆதீனம் தனது வாரிசாக அறிவித்தார். பெங்களூரு சென்று பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு கிரீடத்தை சூட்டி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
 
நித்யானந்தாவுக்கு முறைப்படி முடிசூட்டு விழா மதுரை ஆதீனம் மடத்தில் இன்று காலை நடந்தது. நித்தியானந்தா முதலில் ஆதீனத்திற்கு தங்க கிரீடமும், துளசி மாலையும் அணி� ��ித்து ஆசி பெற்றார். பின்னர் நித்தியானந்தாவுக்கு ஆதீனம் தங்க கிரீடமும், உத்திராட்சை மாலை அணிவித்து வாரிசாக அறிவித்தார்.
 
பின்னர் நித்தியானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
ஆதீன மடம் என்பது ஒரு கடல் போன்றது. இதை செம்மையாக நடத்துவேன். சன்னிதான உத்தரவுபடி நான் நடப்பேன். என் மீத� ��ன குற்றச்சாட்டை சட்ட ரீதியாக நிரூபிப்பேன். நான் இந்த விஷயத்தில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பழிப்பது தவறல்ல. அதற்கு பதில் சொல்வேன். ஆனால் சிலர் அழிக்க நினைக்கிறார்கள். அதுதான் தவறு என்கிறேன். வேதனைப்படுகிறேன்.
 
தமிழ்நாட்டில் 800 தியான மையம் உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் இன்னும் இ� ��்கு தியான பீடம் நடந்து வருகிறது. பக்தர்கள் எல்லாம் வந்து செல்கிறார்கள். எனவே என்னை தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள். என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம். அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என சொல்ல முடியாது. உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் ப ெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 
மதுரை ஆதீன மடத்தில் 293-வது மகா சன்னிதானமாக மனபூர்வமாக ஏற்று கொண்டு முழுமையாக பணியாற்றி சைவ சித்தானந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப பாடுபடுவேன். நானும் 292-வது சன்னிதானமும் சேர்ந்து ஆதீன மடத்தை முறையாக நடத்துவோம். மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.
 
குருவுக்கு (மதுரை ஆதீனம்) ரூ.1 கோடி பாத காணிக்கை வழங்கி இருக்கிறேன். மேலும் ரூ.4 கோடி பாத காணிக்கை சமர்பிக்க இருக்கிறேன். மேலும் எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் � �ிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன். எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளி, கல்லூரிகள் நிறுவப்படும். வருகிற ஜுன் 5-ந்தேதி கனகாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
இவ்விழாவையொட்டி 100 கிராமங்களில் பள்ளிக்கூடம் தொடங்கப்படும். எனக்கு 40 நாடுகளில் ஆசிரமம ் உள்ளது. 1 கோடியே 20 லட்சம் சீடர்கள் உள்ளனர். மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி. அவர் ஒரு ஆலமரம். அம் மரத்திற்கு கீழ் காளான் முளைப்பது இயற்கைதான். காளானாக இருந்து சிறப்பாக பணியாற்றுவேன். ஆதீனம் ஒரு கடல். நான் அதில் ஒரு துளிதான். இந்த கடலில் கலப்பதில் ஆனந்தமடைகிறேன். ஆதீனம் ஞானமிக்கவர். எனக்கு நல்ல வழி காட்டு பவர். எனவேதான் இந்த பெரிய பொறுப்பை ஏற்றேன். என் மீது பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பணியாற்றும்போது ஓரிரு இடைïறு ஏற்படுவது வழக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.
 
மதுரை ஆதீனம் கூறியதாவது:-
 
இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞான சம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு எடுத்து கொண்டது. மதுரை ஆதீனம் 293-வது குரு சன்னிதானமாக நித்தி யானந்தா சுவாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது `திடீர்' என எடுத்து முடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக புதியவரை நியமிக்க யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்த அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்கள� �க இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். இப்போது 293-வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்து எடுத்ததற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
சிவன்- பார்வதி ஆசியுடன் நித்தி யானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நான� ��ம் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம். தந்தையும், மகனும் ஒரு கம்பெனியை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் இருவரும் இணைந்து தந்தை, மகன் போல் நடத்துவோம். இவர் இங்கு (மதுரை) அடிக்கடி வருவார்.
 
கேள்வி: நித்தியானந்த சுவாமிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?
 
 பதில்: அவர்கள் புரியாமல் அறியாமை காரணமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger