காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில், சிவாஜி நடித்த, "கர்ணன்' பட விழாவில், கலந்துகொண்டு ப� �சினார்.
அப்போது அவர், '' சிவாஜியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே, அவர் தான் என் தலைவன். தற்போதுள்ள தலைமுறைக்கு, நீதி, தர்மத்தை பற்றி கவலையில்லை.
சுதந்திரம் பெற்றதே பலருக்குத் தெரியாது. அதனால் தான், தற்போது வரும் மோசமான படங்களை ரசிக்கின்றனர்.
காதல் என்பது மென்னையானது. சினிமாவில் அதை வெளிப்படையாக்கி விட்டனர். மென்மையான காதல் உணர்வை, வன்முறையாக சித்திரிக்கின்றனர். புதிய சினிமாக்களை பார்த்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாடலில், காதலர்களின் முகபாவனையைப் பார்த்தால், அதிலுள்ள கண்ணியம் தெரியும். "இருவர் உள்ளம், பார்த்தால் பசி தீரும்' படங்களை, ஆங்கில, "சப்-டைட்டில்' போட்டு, வெளிநாடுகளில் திரையிட வேண்டும். அதில் வரும் காதல் காட்சிகள், உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை கவரும்''என்று தெரிவித்தார்.
Post a Comment