News Update :
Home » » நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் விருது!!

நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் விருது!!

Penulis : karthik on Saturday 28 April 2012 | 22:09




நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 20 குறும்படங்களில் 5 படங்கள் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.< o:p>

சென்னையைச் சேர்ந்த இளைஞர் எஸ் பிரவீண்குமார் தயாரித்த தி மெசையா படம் நடிப்புக்கான சிறந்த குறும்படமாக விருது வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த தேசப்பன் என்ற சிறுவனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படமாக ரோட்சைட் அம்பானிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கேமிராமேன் விருது கள்ளத்தோணி படத்துக்காக பிரபல ஒளிப்பதிவாளர் செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நார்வே திரைப்பட விழாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவை குறும்படங்கள் போட்டிப் பிரிவுதான். ஏராளமான இளைஞர்கள், புதிய படைப்பாளிகள் ஆர்வத்துடன் தங்கள் படங்க� ��ை இதற்கு அனுப்பி வைத்தனர்.

போட்டிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட படங்களில் 20 படங்களை மட்டும் விழாவில் திரையிட தேர்வு செய்தனர் விழாக் குழுவினர். இந்தப் படங்கள் ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் திரையிடப்பட்டன. Kultursalen, Nedre Fossum Gård, Osloதமிழர்கள் மற்றும் நாரேவேயைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படங்களைப் பார்க்க வந்தனர்.

இரண்டு நாட்கள் திரையிடலின் முடிவில் 5 படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அவை:

சிறந்த குறும்படம் - நடிப்பு
படம்: தி மெசையா
நடிப்பு: தேசப்பன்
தயாரிப்பாளர்: எஸ் பிரவீண்குமார்
இயக்கம்: ஷரத் ஜோதி.

சிறந்த குறும்படம்
படம்: ரோட்சைட் அம்பானிஸ்
இயக்கம்: கமல் சேது

சிறந்த குறும்படம் - இயக்குநர்
படம்: நகல்
இயக்குநர்: பொன் தயா


சிறந்த குறும்படம் - கதை
படம்: பூச்சாண்டி
இயக்குநர்: சைமன் ஜார்ஜ்

சிறந்த குறும்படம் - ஒளிப்பதிவு
படம்: கள்ளத்தோணி.
ஒளிப்பதிவு: செழியன்
இயக்கம்: அருள் எழிலன்

விருதுக்கான குறும்படங்களை குளோரியானா செல்வநாதன் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger