News Update :
Home » » சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்

Penulis : karthik on Sunday, 29 April 2012 | 07:28




மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்� �� கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  
 
கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காண� �ில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு தொழுவத்தில் ராஜலட்சுமி பிணமாக கிடந்தார்.
 
சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்பு மற்றும் அவரது தந்தை மகாமுனி (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்க� ��் இருவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர்.
 
பின்னர் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதுதொடர� ��பாக கச்சக்கட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணை தலைவருமான அயூப்கான் (50), முருகேசன் (54), பொன்னுசாமி (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  
 
சிறுமியை நரபலி கொடுத்தது ஏன்? என்பது குறித்து கைதான அயூப்கான் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
 
நான் தனிச்சிய ம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி கொண்டு இருக்கின்றேன். அதில் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால் கட்டிடம் வேகமாக கட்டி விடலாம் என நினைத்தேன்.
 
கச்சகட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய� ��ரை தொடர்பு கொண்டேன்.   அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதற்காக பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினேன்.
 
அதனை தொடர்ந்து பொன்னுசாமி, மலபார் ஆகியோர் சிறுமி ராஜலட்சுமியை கடத்தி கொண்டு மலபார் வீட்டில் அடைத்து வைத்தனர். சிறுமி காலில் கிடந்த கொலுசை மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.   ;
 
அதிகாலை 2 மணி அளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுசாமி, லட்சுமி ஆகியோர் பிடித்து கொண்டனர். மலபார் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஒரு வாளியில் பிடித்தார். சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டாள். அதன் பின்னர் ரத்தத்தை கல்லூரி கட்டிடத்தை சுற்றி தெளித்தேன்.
 
சிறுமியை கொலை செய்ததற்காக மகாமுன ிக்கு ரூ.4 லட்சமும், பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சமும் கொடுத்தேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
தற்போது சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி கொலை தொடர்பாக மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தேடி வருகிறார்கள்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger