ஐ.பி.எல்., கிரிக்கெட் � �ோட்டிகளில், பெங்களூரு அணிக்காக விளையாடி கொண்டு சிக்ஸர் மழை பொழிந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல்., போட்டி இல்லாத நாட்களில், சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியிருக்கிறார். சமீபத்தில் கன்னட சினிமாவில் உருவாகி இருக்கும் கில்லாடி கிட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கிற� �ஸ் கெய்ல் பங்கேற்றார். இந்த விழாவின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டது மட்டும் இல்லாமல் படத்தின் நாயகி ஹரிப்ரியாவை பார்த்து நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று கூறி ஜொள்ளு விட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ஹரிப்ரியா மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, கிறிஸ் கெய்ல் ரொம்ப நல்ல மனிதர். அவர் என்னிடம் வந்து நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க...! என்று கூறினார். அவர் இப்பட� � கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. பிறகு அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது நடன நிகழ்ச்சியும் நடந்தது. அதில் ஹரிப்ரியாவுடன் சேர்ந்தது கிறிஸ் கெய்லும் நடனம் ஆடி விழாவிற்கு வந்த அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் திகைக்க வைத்தார்.
Post a Comment