தமிழில் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'விண்ணைத் தாண்டி வருவாயா' படங்களை இயக்கிய கவுதம் மேனன், விஜய்-ஐ வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு யோஹன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு யோஹன் என்ற தலைப்பை தேர்வு செய்ததன் மூலம் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குனர் கவுதம் மேனன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோஹன் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, யோஹன் என்பது உலகம் முழுவதும் தெரிந்த பெயர். சர்வதேச அளவில் இப்படத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெளிவாக விளக்கியுள்ளார்.< o:p>
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' பட வேலைகளில் பிஸியாக இரு� ��்கிறார். இப்படம் முடிந்த பிறகு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் இணைவார் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment