மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒ� ��ு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் த ொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.
தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அ� �்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை.
குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம். ஈழத் தமிழர் போராட்டம், முல்லைப் பெரியாறு � �ணை போராட்டம் என பல போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முன்பு இயங்கிய டெசோ அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர்.
சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து அக்கறை காட்டி வந்தவர். அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தவர். இவர் மீதும் சலசலப்புகள், சர்ச்சைகள் இருந்தபோதும் கூட ப� �ரிய அளவில் மக்களிடையே களங்கப்படாதவராகவே இருந்து வந்தார்.
ஆனால் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவு மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஆதீனமா இப்படி முடிவெடுத்தார் என்பதை மதுரை � ��ுழுக்கப் பேச்சாக உள்ளது.
ஆதீனம் இப்படிச் செய்வார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க, ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை ஆதீனம் என்பது மதுரையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமா� � மாறிப் போன ஒன்று, மதுரையின் அடையாளங்களில் ஒன்று, மதுரையின் வரலாற்றில் ஒன்று. எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது கூட சரியாக தெரியாத அளவுக்கு மிக மிகப் பழையான ஒரு மடம்.
சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த மடம் இது. சைவ நெறி பரப்பி வந்த இந்த மடத்தில் இதுவரை இந்த அளவுக்கு பரபரப்பான சம்பவம் எதுவும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுரை ஆதீனம் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாக எழுந்து � �ிற்கிறது.
மதுரையைச் சேர்ந்த ஆசிரியரான சுப்பிரமணியம் என்பவர் ஆதீனத்தின் முடிவு குறித்துக் கூறுகையில், ஏதோ 'ஏ படம்' பார்த்தது போல இருக்கிறது ஆதீனத்தின் இந்த முடிவு. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இது மோசமாக கனவாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட நான் வேண்டுகிறேன். அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டு ஆதீனம் மடம் வழியாகத்தான் நான் வீட்டுக்குப் போவேன். இனி� ��ேல் நான் இந்த மடத்தைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை. ரொமபக் கஷ்டமா இருக்கு சார் என்றார்.
மதுரையைச் சேர்ந்தவரான கதிரேசன் என்ற பேராசிரியர் கூறுகையில், மதுரை ஆதீம் என்பது மாபெரும் தலைவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மடம். பசும்பொன் முத்துராமலிங்கத் த� ��வர் போன்றோர் அரவணைத்திருந்த மடம் இது. இதன் வரலாறு 1500 ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கு மதுரை ஆதீனம் நியமித்துள்ள புதிய ஆதீனத்தை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.
எழுத்தாளர் பிரியதர்ஷனி என்பவர்க கூறுகையில், எனக்கு இந்த நியமனம், அதன் விதிகள� �� உள்பட எதுவுமே தெரியாது. ஆனால் மதுரை மக்களும், மதுரை நகரமும், மற்றவர்கள் முன்பு கேலிப் பொருளாகி விட்டதை மட்டும் உணர்கிறேன். மதுரையின் பெயர் நிச்சயம் மாசுபட்டு விட்டது என்பதில் யாருக்கு� ��் சந்தேகம் தேவையில்லை என்றார்.
மதுரை மக்களுக்கு ஆதீனம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறாரோ...?
Post a Comment