சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலிருந ்து வெளிவரும் 'கார்ட்டூன் வாச்' என்னும் இதழ் சார்பில் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பின்னர் பேசிய பால்தாக்கரே,
ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பெயரை பரிந்துரை செய்தது காங்கிரஸ் கட்சியின் 'இழிவான நாடகம்' எனவும், இதுதான் உண்மையான 'டர்ட்டி பிக்சர்' எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், சிவசேனா ஆ� ��ரவு இதழான 'சாமனா'வில் ராஜ்ய சபா எம்..பி பதவிக்கு சச்சின் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்ததில் நிச்சயம் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என பால் தாக்கரே நேற்று கருத்து கூறியிருந்தார்.
சச்சினை 'பாரத ரத்னா சச்சின்' என அழைப்பதையே அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்புவார்கள் எனவும், காங்கிரசின் இந்த நாடகத்தால் இப்போது அவர் வெறும் 'சச்சின் எம்.பி' ஆகிவிட்டார் எனவும் தாக்கரே கூறியுள்ளார்.
Post a Comment