"அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடை� ��்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் , அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுக� �ையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம், ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள், 140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவி ல் ரஷ்யா வழங்கவுள்ளது.
படையில் சேர்கிறது தேஜஸ் :
இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை, 1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர� ��ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.
Post a Comment