தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் "பிட்" படங்கள்என்று
அழைக்கப்படும் "சாப்ட் ஃபோர்ன்" வகையறா படங்களுக்கு பெரிய மவுசு
இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரியான
படங்களுக்கான தியேட்டர்கள் ஊரோரத்திலோ, அல்லது நகரின் முக்கிய தெருவிலோ,
இருக்கத்தான் செய்கிறது.
என்பதுகளில் தான் இம்மாதிரியானபடங்களுக்கு ஒரு மவுசு வர ஆரம்பித்தது.
அதுவும் மலையாள படங்கள் தான் இம்மாதிரியான சாப்ட் ஃபோர்ன் படங்களுக்கான
சப்ளையர்களாக இருந்த்து. "அவளோட ராவுகள்" படம் என்னவோ நல்ல படம் தான்
ஆனால் பெயரும், படத்தின் கருவும் கொஞ்சம் செக்ஸியாக இருந்தததினால்,
சென்னையின் முக்கிய தியேட்டரானஆனந்த் தியேட்டரில் நூறு நாள் ஓடியது என்று
நினைக்கிறேன்.
அதன் பிறகு அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, சாரவலையம்,
என்றெல்லாம் மலையாள படங்கள், வீடியோவின் வரவால் டல்லடித்துக் கொண்டிருந்த
திரைஉலகை காப்பாற்றி கொண்டிருந்ததுஇம்மாதிரியான படங்கள் தான். பல
தியேட்டர்களை மூடி விழாவிலிருந்து காப்பாற்றியதும் இம்மாதிரியான படங்கள்
தான.
சாதாரணமாகவே செக்ஸ் கதை களன்களை மட்டுமே அடிப்படையாய் கொண்டு
தயாரிக்கப்படும் இம்மாதிரியான படங்களுக்கு மொழிஒரு பிரச்சனையாக இருந்தது
கிடையாது. மிக குறைந்த செலவில் ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது ஒருமலை
வீட்டிலோ, லோ லைட்டில் வயதான கணவன், இளம் மனைவி, பக்கத்துவீட்டு இளைஞன்,
அல்லது விடலை வேலைக்காரப் பையன் என்ற டெம்ப்ளேட் கதைகளை புது புது
நடிகைகளை வைத்து தோலுறித்து காட்டி வந்தார்கள். மலையாள திரைப்படங்களின்
வரவேற்பை பார்த்த ஹிந்தி பட உலகமும் அதன்ப்ங்குக்கு "ஜவானி, திவானி"
போன்ற படங்களை அள்ளி விட, ஒரு கட்டத்தில் இம்மாதிரி படஙக்ளுக்கான
தியேட்டர்கள் தான் அதிகமோ என்று தோன்றுமளவுக்கு எங்கெங்கு காணினும் பிட்
படமாகவே காட்சியளித்தது.
இம்மாதிரி படங்களில் நேரடியாய்உடலுறவு காட்சிகள் இல்லாவிட்டாலும்,
சென்சார் செய்து வந்த பிறகு கட் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைத்து
வெற்றி பெற்றார்கள் விநியோகஸ்தர்கள். பின்பு அது போதாமல், ஸ்மால் டைம்
நடிகைகளை வைத்து ஃபோர்னோ படங்களையே எடுத்து, அதை தனியாக படத்துக்கு
சம்பந்தமேயிலலாத் இடத்தில் இடைவேளைக்கு முன் ஒன்று, பின்பு ஒன்று என்று
ஒளிபரப்பி, "அதை" காட்டி முடிந்ததும், படத்தை முடித்து, கல்லா கட்டி
கொண்டிருந்தார்கள். சென்னையில்இதற்காகவே திருவெற்றியூர், போரூர்,
பரங்கிமலை, ஆலந்தூர், என்று ஏகப்பட்ட இடங்களில் பிரபலமான தியேட்டர்கள்
உண்டு. இம்மாதிரியான தியேட்டர்கள் ஒவ்வொரு நகரங்களிலும், நிச்சயம்
இருக்கும்.
வீடியோவின் ஆக்டோபஸ் வளர்ச்சியால் இரண்டு மணி நேர போர்னோ படங்களே
மக்களுக்கு முப்பது, நாற்பது ரூபாய்க்கு கிடைக்கவே, இம்மாதிரியான
படங்களுக்கு மவுசு குறைய ஆரம்பித்தது. 90களில் குறைய ஆரம்பித்த மவுசு..
நடுவில் ஒன்றுமேயில்லாமல் போய் கூட இருந்தது, கடந்த ரெண்டு வருடங்களாய்
மீண்டும், தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.
எப்போதெல்லாம் திரையுலகம் டல்லடிக்கிறதோ.. அப்போதெல்லாம் இப்படங்கள் வலைய
வரும். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி ஓரு பக்கம்
நல்ல சின்ன திரைப்படங்கள் வருவதற்கான அறிகுறியை காட்டினாலும், பெரிதும்
உதவுவது இம்மாதிரியானதயாரிப்பாளர்களுக்குதான்.
சென்ற வருடம் சத்தமேயில்லாமல் சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ்
நாடெங்கும் போட்ட காசுக்கு மேல் வசூலான படம் வேலுபிரபாகரனின் "காதல் கதை"
அதற்கு பிறகு வெறும் போஸ்டரை மட்டுமே வைத்து சரியான ஓப்பனிங் கலக்ஷனை
பெற்ற படம் "மாதவி". இவர்கள் எல்லாம் அடுத்த படத்தை தயாரிக்க
ஆரம்பித்துவிட்டார்கள். வேலு பிரபாகரன் இப்போது டிஜிட்டல் கேமராவில் மிக
குறைந்த பொருட் செலவில் படப்பிடிப்பில் இருக்கிறார். ஏற்கனவே காதல்
கதையில் பெற்ற வெற்றி. இவரின் அடுத்த படத்துக்கு டிமாண்டை ஏற்படுத்தி
விட்டது.
இப்போது அந்த வரிசையில் "துரோகம்" நடந்த்து என்ன?, மிக அருமையாய்,
டெம்ப்ட் செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள், ப்ளாக் அண்ட்
ரெட்டில் கண்ணில் "குத்தும்" போஸ்டர்கள், பேப்பர் விளம்பரங்கள். போன 11ம்
தேதி ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதே பதினோராம் தேதி ஓர் இரவு என்கிறபடமும்
ரிலீஸாகியிருக்க, இவர்களுக்கு ரெண்டே தியேட்டரில் காலே அரைககால் ஷோ
டைம்மிங்கே கிடைக்க, துரோகத்துக்கு, சென்னை மற்றும் செங்கல்பட்டு
ஏரியாவில் சுமார்18 பிரிண்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
ன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன் முதல் ரெண்டு ஷோ செம ஓப்பனிங்காம்.
தியேட்டர்காரர்களே இம்மாதிரியான படஙக்ளுக்குதான் முக்யத்துவம்
தருகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான தியேட்டர்களில் ஷேர் முறை மட்டுமே
இருப்பதால், நல்ல ஓப்பனிங் உள்ள திரைபடங்களை வெளீயிட்டாலே அன்றி
அவர்களுக்கு கல்லா கட்டாது. புதிதாய் வரும் சின்ன திரைப்படங்களுக்கு
மவுத் டாக் போய் படம் பார்க்க வருவதற்குள் தியேட்டரிலிருந்து படம்
போய்விட்டிருக்கும் பரிதாப நிலை வந்திருக்கும். இந்த வியாபார முறை பற்றி
நான் ஏற்கனவே "சினிமா வியாபரத்தில் எழுதியிருக்கிறேன்.
சவுத்ரி, குஞ்சுமோன், குட்நைட் மோகன், ஆஸ்கார் ரவிசந்திரன் போன்றவர்கள்
ஒரு காலத்தில், இம்மாதிரி படஙக்ளை தயாரித்தோ, விநியோகம் செய்து
சம்பாதித்துதான் இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள். பல நேரங்களில்
திரையுலகில் பல பேருடைய வாழ்க்கையை காப்பாற்றி, காலம் தள்ளியதே "பிட்"
படங்களினால் தான் என்றே சொல்லலாம்.எப்போதெல்லாம் இம்மாதிரி படங்கள்
ஆக்கிரமிக்கஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் திரையுலகம் தள்ளாட்டமிடுகிறது
என்பதை சொல்லும் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.