News Update :
Home » » அரவாணிகள்!!!

அரவாணிகள்!!!

Penulis : karthik on Sunday, 29 January 2012 | 17:07

திரு நங்கைகள் என்பவர்கள் யார் என்பதைப்பற்றிய சிறு அலசலையே இங்கு
வாசிக்கப்போகிறீர்கள்.
சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு
இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது
முடியாது. அவர்காளின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான
மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
23 ஜோடிகுறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23)
இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள்
தொழிற்படுகின்றன.
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண்
பெண்தன்மையைத்தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும்அதேவேளை சிறிய
அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில்
டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள்
உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்குபெண்ணின் அடையால உறுப்புக்களும்
பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வழர்ச்சியடையாத நிலையில்
மைந்திருக்கும். )
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக்கொண்டு ஆண்,பெண் என
தீர்மானித்துவிடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த
வகுப்பை சார்ந்ததுஎன்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும்
பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண்
தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்படவேண்டும்
என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை;
ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )ஒரு குழந்தை "அரவாணி/
திரு நங்கை"யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த
குறையைப்போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
* ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன்
(பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக
இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும்
மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்)
கொடுத்துப்பழக்கவேண்டும்.
அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்)
உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் ரெஸ்ட்
செய்யவேண்டும்.பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன்
சிகிச்சையளிப்பார்.
( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.)
* பெண்பிள்ளையொன்று எந் நேரமும்ஆண் பிள்ளைகளுடன் மட்டும்
விளையாடிக்கொண்டு தன் வயது பெண்பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும்
கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக
வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல,
கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.)
( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.)
----
நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு
XX குறோமோசோம்களும்,சில பெண்களுக்கு XY குறோமோசோம்களும் மாறுதலாக
இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள்.
( சாதாரணமாக ஆண்களுக்கு XY உம் பெண்களுக்கு XX என்றும் குறோமோசோம்
அமைந்திருக்கும்.)
----
இந்த தகவல் பலரை சென்றடைய உதவுங்கள். ( திரு நங்கைகள் பற்றிய
விழிப்புணர்வும், அடிப்படையும் சமுதாயத்திற்கு தேவையாக உள்ளது.)
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger