News Update :
Home » » அமலா பால் இடம் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது? கடுப்பில்ஓவியா

அமலா பால் இடம் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது? கடுப்பில்ஓவியா

Penulis : karthik on Sunday 29 January 2012 | 04:54

ஓவியா?' - ஒற்றை வார்த்தை கவிதை தோன்றுகிறது ஓவியாவை பார்க்கும்போது.
உறுத்தாத அழகு,வசீகரப் புன்னகை, அளவான உடல்வாகு... "களவாணி' வெற்றிக்குப்
பின் தமிழ் சினிமாவில் முதலிடம் ஓவியாவுக்குதான் எனப் பேசப்பட்டவர்.
இடைவெளிக்குப் பின் "பசங்க' புகழ் பாண்டிராஜின் "மெரினா' படத்தில்
நடித்து வருகிறார்.
எப்படி இருக்கீங்க?
இப்போ நல்லா இருக்கேன். மலையாளம், தமிழ், தெலுங்குன்னு மூணு
இண்டஸ்ட்ரியிலும் படங்கள்நடிச்சுக்கிட்டு இருக்கேன். எப்பவும் சினிமாவைப்
பத்திதான்யோசிக்கிறேன். தமிழில் எனக்கு சினிமா வாய்ப்புகளே இல்லைன்னு
சொல்லுகிறவர்களுக்கு இப்ப என்னிடம் பதில் இருக்கு.
பாண்டிராஜின் "மெரினா' படத்தில் நடிக்கிறேன். சினிமாவில் இருப்பதை நான்
சுதந்திரமாக உணர்கிறேன். என்னைக்கும் நான் சினிமாவில் மட்டுமேதான்
இருப்பேன். மார்க்கெட் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
ஆனா இப்போதும் நான் அந்த எண்ணத்துல வரலை. எனக்கான சினிமா எனக்கு மட்டுமே
வந்து தீரும்ங்கிற நம்பிக்கை இருக்கு.
இருந்தாலும், கமலின் "மன்மதன் அம்பு' பரபரப்புக்குப் பின் ஆளையே காணுமே?
உண்மைதான். "மன்மதன் அம்பு' பிரச்னையை மறுபடியும் கொண்டு வராதீங்க.
அந்தப் படத்தில் என்னநடந்ததுன்னு அப்பவே மீடியாக்களிடம் சொல்லிட்டேன்.
படத்தில் எனக்கான ஸ்கோப் என்னன்னு தெரிந்துதான் நடிக்கப் போனேன். ஆனா
அப்படியே ஏமாத்திட்டாங்க. நிறைய காட்சிகளை கட் பண்ணிட்டாங்க. சினிமாவில்
இதெல்லாம் சகஜம்னு நானே அமைதியாகிட்டேன்.
"களவாணி' நல்ல ஒப்பனிங் கொடுத்தபடம்தான். அதை ஏன் நீங்கள் தக்க வைத்துக்
கொள்ளவில்லை?
என்னைப் பார்க்கிற எல்லோரும் இதைத்தான் கேட்கிறார்கள்."களவாணி' ரொம்பப்
பிடிச்சு நடிச்ச படம். மனசுக்கு நெருக்கமான ஒரு படம் இருக்குனா அது நான்
நடிச்ச "களவாணி'தான்.
இப்பவும் நான் அந்த பாதிப்பில்தான் இருக்கேன். நல்லா நடிச்சிருக்கேன்னு
பாராட்டதவர்களே இல்லை. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த பொண்ணுன்னு
எத்தனை பேர் பெயர் வாங்கி இருக்காங்க. அந்தப் படத்துக்குப் பின் மலையாள
சினிமாவில் நல்ல ரெஸ்பான்ஸ்.
நல்ல நல்ல படங்கள், பெரிய இயக்குநர்கள், மாஸ் ஹீரோக்கள்னு வாய்ப்புகள்
குவிந்தது. திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிட்டு இருந்தேன்.
அந்த சமயத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகளும் நிறைய வந்தன. மலையாள
சினிமாக்களில் ரொம்பவே கவனம் செலுத்தியதால் தமிழ் சினிமா பத்தி
யோசிக்கலை.
அதெல்லாம் முடித்து விட்டு திரும்பினால் தமிழில் வாய்ப்புகளே இல்லை.
இடையில் நான் இருக்கேன்னு சொல்ல"மன்மதன் அம்பு' உள்ளிட்ட சில படங்களில்
தலை காட்டினேன். இப்பமீண்டும் "மெரினா' முலம் வந்திருக்கேன்.
நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணுக்கு, வாய்ப்பு கொடுக்க தமிழ் சினிமா தவறி
விட்டதுன்னு சொல்லுறீங்க, அப்படித்தானே?
ஏங்க... வம்புல மாட்டி விடுறீங்க? சில பிரச்னைகளை முடித்து விட்டு
இப்பதான் வந்திருக்கேன். அதுக்குள்ளேயே இப்படியா? தமிழ் சினிமாவைப் பத்தி
என்னைக்கும் நான் தப்பா பேச மாட்டேன்.
ஏன்னா என் திறமையை வெளிக்கொண்டு வந்தவங்க தமிழ் சினிமாக்காரங்கதான்.
சற்குணம் சார் என்னை நல்லா தயார் பண்ணினார். என்னிடம் இருந்து இப்படி ஒரு
நடிப்பு வந்திருக்கான்னு நானே ஆச்சரியப்படுறேன். அதுக்குப் பின் வந்த சில
வாய்ப்புகளை நான்தான் சரியாக பயன்படுத்திக்கலை. இனி எல்லாம் நல்லதே
நடக்கும்.
உங்களுக்கு பின்னாடி வந்த அமலாபால், தமிழ் சினிமாவில் எந்த இடத்துல
இருக்காங்கன்னு தெரியுமா?
தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு
ஸ்டைல்இருக்கும். அந்த வகையில் அமலாபாலுக்குன்னு ஒரு ஸ்டைல் இருந்தா
தப்பில்லையே? நான் என்னை மட்டும்தான் பார்க்கிறேன். இது ஓவியாவோட
பேட்டிதானே.. அப்பறம் அமலாபாலைப் பத்தி ஏன் கேட்கிறீங்க? நமக்குத்
தேவையானதை கடவுள் கொடுத்திருக்கான்னு எதையும் நிறைவோடு பார்த்தாலே மனசு
லேசா மாறிடும். போதும்கிற வார்த்தைதான் நிம்மதியின் முதல் புள்ளி.
தத்துவ மழை பொழிறீங்களே, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமோ?
கண்டிப்பா இருக்கு. கேரளத்தில் சர்ச், கோயில்னு எதையும் விட்டுவைக்க
மாட்டேன். எல்லா இடத்துக்கும் போயிருக்கேன். ஆலப்புழாவில் இருக்குறப்ப
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பாபா மடத்துல தினமும் ஆஜராகிடுவேன்.
தமிழ்நாட்டிலும் நிறைய கோயில்களுக்குப் போயிருக்கேன்.மதுரை மீனாட்சி
அம்மன் கோயில் பார்க்க ஆசை. என் ஃப்ரெண்ட் வரச் சொல்லிக்கிட்டே இருக்கா.
தஞ்சாவூர் டெம்பிளுக்கும் போகணும்னு ஆசை.
ரொம்ப நாள் கழித்து தமிழில் நடிக்க வர்றீங்க... எப்படி இருக்கு அனுபவம்?
வெரி சூப்பர்! "களவாணி'க்குப் பின் பெரிதாக பிரேக் இல்லை. நிறைய
யோசிச்சேன். நிறைய கதைகள்கேட்டேன். எதுவும் என் கவனம் ஈர்க்கலை. அப்பதான்
பாண்டிராஜ் சார் பட வாய்ப்பு வந்தது. அவரோட"பசங்க' படம் எனக்கு ரொம்பப்
பிடிக்கும்.
அந்த நம்பிக்கையில பாண்டிராஜ் படம்னதும் கதையை கேட்காமலேயே
ஓ.கே.சொல்லிட்டேன். மெரினா பீச்சில் இருக்கும் லைஃப்தான் படம். நிறைய
சிறுவர்கள், கஷ்டப்படும் மக்கள், மீனவர்களின் வாழ்க்கைன்னு படம்முழுக்க
நிறைய விஷயங்கள் இருக்கு.
இது மாதிரி படத்தில் எனக்கு என்ன வேலைன்னு கேட்கிறீங்களா? எனக்கு காதல்
எபிசோடு. டி.வி. காம்பியர் சிவகார்த்திக்கேயனும் நானும் காதல் ஜோடி. மழை,
காற்று, வெயில்ன்னு எது வந்தாலும் பீச்சில் காதலிப்பாங்களே? அந்தகாதல்
ஜோடிகளில் இப்ப நாங்களும் சேர்ந்துட்டோம். அப்ப படத்துல என்ன இருக்கும்னு
நீங்களே யோசிங்க.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger