News Update :
Home » » இந்திய அணியின் படுதோல்வியைகொண்டாடும் பாக்கிஸ்தான்

இந்திய அணியின் படுதோல்வியைகொண்டாடும் பாக்கிஸ்தான்

Penulis : karthik on Sunday, 29 January 2012 | 22:37

அவுஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படு தோல்வியடைந்ததை பாகிஸ்தான்
ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான்
வெற்றி பெற்றுள்ளதற்கு அந்த அணி வீரர்களையும் , அணித்தலைவர் மிஸ்பா உல்
ஹக்கையும் இந்திய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ , இந்தியா தோல்விக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்து செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கட் ரசிகரும் , டாக்டருமான அம்பிரீன்
என்பவர் கூறுகையில் , அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி கண்டுள்ளதும்
, பாகிஸ்தான் , இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
பாகிஸ்தானிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு
அந்நாட்டுஊடகங்கள் அறிவுரை கூறியிருப்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை
அளிக்கிறது என்றார்.
முன்னாள் அணித்தலைவர் மொயின் கூறுகையில் , ஐ.பி.எல் போட்டியில் எங்கள்
வீரர்களை சேர்த்துக் கொள்ள இந்தியா மறுக்கும் நிலையில் , பாகிஸ்தான்
சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஐ.பி.எல் போட்டியில் எங்களை புறக்கணிப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது எங்கள் அணியில் சிறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டிருக்கிறது என்றார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger