News Update :
Home » » திருச்சி நகைக்கடையில் 40 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

திருச்சி நகைக்கடையில் 40 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

Penulis : karthik on Sunday, 29 January 2012 | 04:36

திருச்சியில் 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில், வடமாநில கொள்ளை
கும்பலை சேர்ந்தமேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்கு
எதிரே அமர்ஜுவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த நவம்பர் மாதம்
4-ந் தேதி ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.
தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில், தனிப்படை
போலீசார்நடத்திய விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இந்த
கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்துக்கு முன்பு
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த மோகன்சிங் (வயது 60) என்பவர்
பிடிபட்டார்.
அவரிடம் இருந்து 11/2 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புலன்
விசாரணையில், 14பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது
தெரியவந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சட்டீஸ்கர் மாநிலத்தை
சேர்ந்த பசந்து (30) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலத்தில் கல்யாண்பூரை சேர்ந்தவர் மோகன்சிங். மும்பையை
அடுத்த பன்வேலியை சேர்ந்தவர் பூல்சிங் (44). இவர்கள் 2 பேரும் ஆரம்ப
காலத்தில் கள்ளசாராயம் காய்ச்சி திருட்டு தொழில் செய்து வந்தனர்.
அதன்பிறகு தனித்தனியாக கும்பல்களை சேர்த்து டெல்லி, உள்பட பல்வேறு
வடமாநில பகுதிகளில் கொள்ளையடித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு பூல்சிங் தலைமையிலான கும்பல் தமிழகம் வந்தனர்.
சென்னை, திருத்தணி, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு
சுற்றுப்பயணம் செய்து, பெரிய அளவில் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டனர்.
இறுதியாக திருச்சி வந்த அந்த கும்பல், பெரியகடைவீதி பகுதியை
நோட்டமிட்டனர். அதன்பிறகு அமர்ஜுவல்லர்ஸ் கடையில் வாட்சுமேன் இல்லாததை
தெரிந்து கொண்டு அந்த கடையை குறிவைத்தனர்.
உடனே மோகன்சிங் தலைமையிலான 7 பேர் கும்பல் திருச்சிக்கு
வரவழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஒரு
லாட்ஜில் பக்தர்கள் என கூறி அறை எடுத்து தங்கினார்கள். கொள்ளை
திட்டத்தைநிறைவேற்றுவதற்காக 3 மாதமாக திருச்சியில் பல்வேறு லாட்ஜ×களில்
அவர்கள் தங்கி நோட்டமிட்டு வந்தனர்.
கொள்ளையடிக்க நாள் குறித்ததும் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அதிகாலை 3
மணிக்கு அறைகளை காலிசெய்துவிட்டு, பூ, பழம் வாங்கி கொண்டு ஆட்டோவில்
மெயின்கார்டுகேட் பகுதிக்கு சென்றனர்.
பூல்சிங் மகன் தாராசிங், அவருடைய நண்பர் ரோஹித் ஆகிய 2 பேரும் மோட்டார்
சைக்கிளில் வந்துள்ளனர். மற்ற 12 பேரும் ஆட்டோவில் வந்தனர். பக்தர்கள்
போல் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு என்.எஸ்.பி.ரோட்டில் நடந்து சென்று
மலைக்கோட்டை கோவில் வாசலில் அமர்ஜ×வல்லர்ஸ் நகை கடைமுன்பு ஒன்றாக கூடி
நின்று சாமி கும்பிட்டனர்.
இவர்களில் ராகேஷ், சஞ்சய் என்ற 2பேர் மட்டும் அமர்ஜுவல்லர்ஸ்
நகைக்கடையின் பூட்டை கட்டர் வைத்து வெட்டி எடுத்து ஷட்டரை திறந்து உள்ளே
நுழைந்தனர். பூட்டை வெட்டும் போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க
வெளியேநின்ற 12 பேரும் "கணேசா'',"கணேசா'' என்று பலத்த கோஷம் போட்டனர்.
அப்போது அங்கு தூங்கி கொண்டு இருந்த மற்ற கடையின் காவலாளிகள்எழுந்து
பார்த்தனர். யாரோ? பக்தர்கள் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டனர்.
இதையடுத்து 15 நிமிடத்துக்குள் கடையில் இருந்த நகைகளை அள்ளி பைகளில்
போட்டு கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் பஸ் நிலையம் சென்றனர். அதன்பிறகு
திருச்சியில் இருந்து பஸ் ஏறி, விழுப்புரம் சென்று உள்ளனர். போகும் போது
மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்று திருச்சியை தாண்டி ஒரு
இடத்தில்போட்டு விட்டு சென்றுள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து மீண்டும் பஸ் ஏறி திருப்பதி சென்றனர்.
திருப்பதியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிய அந்த கும்பல் ஒரு தராசை
விலைக்கு வாங்கி கொள்ளையடித்த நகைகளை எடைபோட்டு பங்கு பிரித்தனர். ஒரு
நபருக்கு 11/2 கிலோ நகைகள் கிடைத்ததாகவும் மொத்தம் 21 கிலோ நகைகள்தான்
இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். பின்னர் அந்த கும்பல்
லாட்ஜை காலி செய்து விட்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்று தலைமறைவாகி
விட்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட
பல இடங்களுக்கு சென்று கொள்ளை கும்பலை தேடி வந்தனர். மோகன்சிங் தங்கி
இருந்த இடம் தெரிந்தும், இந்த வழக்கில் துப்பு துலங்கியது.
அவரை 5 நாட்கள் ரகசியமாக கண்காணித்தனர். மோகன்சிங் எப்போதும் கையில்
துப்பாகியுடன் சுற்றி திரிந்ததும், இவர் பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய
கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
திருச்சி நகைகடை கொள்ளை சதித்திட்டத்தை மும்பையை சேர்ந்த பூல்சிங் தான்
மூளையாக செயல்பட்டு இருக்கிறார். ஒற்றைகண் உடைய இவர் பூட்டை உடைத்தல்,
கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டுதல், கார் டிக்கியில் உள்ள பொருட்களை
திருடுவதில் கில்லாடி.
மேற்கண்டவை கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொள்ளையில் மொத்தம் 14 பேர் ஈடுபட்டனர். இதுவரை 2 பேர் மட்டுமே கைது
செய்யப்பட்டு 11/2கிலோ தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றவர்களை கைது செய்ய போலீசார்தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger