News Update :
Home » » தமிழ் நாட்டின் இரும்புப் பெண்

தமிழ் நாட்டின் இரும்புப் பெண்

Penulis : karthik on Tuesday, 31 January 2012 | 05:53

தமிழ் நாட்டின் இரும்புப் பெண் என்று ஜெயலலிதாவை சென்னையில் உள்ள
அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
துணைத் தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அமெரிக்க
வெளியுறவு அமைச்சுக்கு ஜெயலலிதா குறித்து அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர
ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல் வெளியாகி உள்ளது. சட்டத்தையும்
ஒழுங்கையும் நிலைநாட்டுகின்றமையில் இரும்புக் கரங்களுடன் முதல்வர்
ஜெயலலிதா நடந்து கொண்டார்,
ராஜிவ் காந்தி கொலையை தொடர்ந்துமுதன் முதல் தமிழக
முதலமைச்சராகபதவியேற்றுக் கொண்ட இவர் தமிழ் நாட்டில் வியாபித்து
வெளிப்படையாக செயல்பட்டு வந்த புலிகள் இயக்கத்தை பூண்டோடு ஒழிக்க
உத்தரவிட்டு இருக்கின்றார்.
தமிழ் நாட்டில் புலிகளை முடிக்கஎன்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ
அனைத்தையும் செய்யுங்கள் - புலிகளைச் சார்ந்தவர்களை தமிழ் நாட்டில்
இருந்து ஒழிக்க நீதிக்கு புறம்பான கொலைகளை மேற்கொண்டால்கூட பரவாயில்லை
என்று இவர் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டு
இருக்கின்றார்.
அப்பாதுகாப்பு உயரதிகாரியிடம் இருந்து இத்தகவல் துணைத் தூதரகத்துக்கு
கிடைத்து உள்ளது என ஆவணத்தில் எழுதப்பட்டு உள்ளது. புலிகளுக்கு எதிரான
இவரது அதிரடி நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான போதும் தமிழ்
நாட்டில் இருந்து புலிகள் வெளியேறிச் செல்ல இந்நடவடிக்கைகள் காரணம் ஆயின.
குற்றச் செயல்களுக்கு எதிராக இவரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்
புலிகளுடன் மட்டும் நின்று விடவில்லை.
2004 ஆம் ஆண்டு முதல்வராக இவர் பதவியில் இருந்தபோதுதான் சந்தன கடத்தல்
வீரப்பன் தமிழ்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் பல
தசாப்த காலங்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் காட்டி வந்தவன்.
பொலிஸார் மற்றும் வன அதிகாரிகள்உட்பட நூற்றுக் கணக்கானோரை கொன்றவன்
என்றும் ஆவணத்தில் உள்ளது. ஜெயலலிதா பற்றிய குறிப்பில் இவர் இரும்புப்
பெண்என்பதற்கு அப்பால் மேல் நாட்டு ஸ்டைலிலான குட்டைப் பாவாடையை அணிந்து
தமிழ் திரைப்படத்தில் முதன்முதல் தோன்றி இருந்த நடிகை.
எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக மாத்திரம் அன்றி எம்.ஜி.ஆரின்
வைப்பாட்டியாகவும்அறியப்படுபவர் என்றும் ஆவணத்தில் உள்ளது.
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவில் செக்ஸ்
சம்பந்தப்பட்டு இருக்கின்றது.
ஆனால் இருவராலும் பகிரங்கமாக ஒருபோதும் வெளியுலகத்துக்கு ஒப்புக்
கொள்ளப்படவோ, வெளிப்படுத்தப்படவோ இல்லை என்றும் ஆவணத்தில் உள்ளது. இந்திய
அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் என்று இந்திரா காந்தி வர்ணிக்கப்பட்டார்.
அதே போல அ.தி.மு.கவில் ஒரே ஒரு ஆண்என்று ஜெயலலிதா வர்ணிக்கப்படுகின்றார்
என்றும்ஆவணத்தில் உள்ளது. இவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்
என்கிற ஆணாக இருந்தாலும் அரசியலில் உச்சாணிக் கொப்பைத் தொட்டு ஒரு
பெண்ணாக கம்பீரத்துடன் நின்று நிலைத்து வருகின்றார் என்றும் ஆவணத்தில்
உள்ளது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger