News Update :
Home » » என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்

என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்

Penulis : karthik on Monday, 30 January 2012 | 19:17

திரைப்பட விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக வந்த வதந்திகளுக்கு
நடிகை அமலா பால் பதிலளித்துள்ளார். நடிகை அமலாபால், சித்தார்த் ஜோடியாக
நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா
வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. நடிகர் சித்தார்த் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் அமலாபால் கலந்து கொள்ளவில்லை. திட்டமிட்டு
இவ்விழாவை புறக்கணித்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து
அமலாபால் கூறியதாவது, என் மீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளும்,
வதந்திகளும் பரப்பப்படுகின்றன. காதலில் சொதப்புவது எப்படி? பட விழாவை
புறக்கணித்ததாக குறை சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எவ்வளவோ பட
விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் நடித்த படங்களை
விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டுள்ளேன். எந்த
கதாநாயகியும் என்னைப் போல் விழாக்களில் கலந்து கொண்டிருக்கமாட்டார்கள்.
தெய்வத்திருமகள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன்
என்றாலும் அப்படத்தை விளம்பரப்படுத்த பல ஊர்களுக்கு சென்றுள்ளேன். வேட்டை
படத்தை விளம்பரம் செய்வதிலும் எனது பங்களிப்பு அதிகமாக இருந்ததுள்ளது. பல
மாநிலங்கள் சென்று எனது படங்களை விளம்பரப்படுத்தியுள்ளேன். அதனால்
என்னைப்பற்றி இதுபோல் அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது
என்று கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger