News Update :
Home » » நண்பன்

நண்பன்

Penulis : karthik on Monday, 30 January 2012 | 03:43

மஹாராஷ்டிரா சேட்டு ஃபிகரை, மைலாப்பூர் மாட்டுப் பெண்ணாக்கியிருக்கிறார்
ஷங்கர். அப்படியொரு கனக்கச்சிதமான ஃபிட்டிங்! ஜெயம்ராஜா போன்ற 'ரீமேக்
வைத்தியர்களுக்கு' மட்டுமே சாத்தியப்பட்ட இந்த கலையில் ஷங்கரும்
டாக்டரேட் வாங்கியிருக்கிறார் என்பதுதான்'நண்பன்' வட்டாரத்தின்
நற்செய்தி. ஒரிஜனலான த்ரி இடியட்ஸ்சை நம்மில் பலரும் பார்த்து
தொலைத்ததால் வந்த விளைவுதான் இந்த ஒப்பீடு. இல்லையென்றால் அதற்கும்
அவசியம் இல்லையே!
பத்தாம்ப்பு பாஸ் பண்ணுவதற்கு பாண்டிச்சேரி கல்வி மந்திரி என்னவெல்லாம்
பாடு பட்டு, எப்படியெல்லாம் கம்பி எண்ணினார் என்பதை படம் முடிந்துவெளியே
வரும்போது மீண்டும் நினைவு கூர வைக்கிறார் ஷங்கர். படமும் இக்கால கல்வி
முறை குறித்து நிறைய கேள்வி எழுப்புகிறது. (ஷங்கரின் ஊறுகாய், எந்த
காலத்தில் சப்பென்று இருந்ததாம்?)
நண்பன் விஜய்யை தேடி கல்லு£ரியின் பழைய நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த்,
சத்யன் மூவரும் போகிறார்கள். கூடவே விஜய்யின் காதலி இலியானாவும் ஒட்டிக்
கொள்கிறார். அவரது முகவரியில் போய் பார்த்தால் அங்கு விஜய் பெயரில்
இருப்பது எஸ்.ஜே.சூர்யா. இவருக்காக அவர் பரீட்சை எழுதியிருக்கிறார்
என்பதும், பணக்கார சூர்யாவுடைய வேலைக்காரர் மகன்தான் விஜய் என்பதும்
தெரியவர, விஜய்யை தேடுகிறது நண்பன் வட்டாரம். அவர் என்னவானார் என்பதுதான்
முடிவு.
ஒரு மரத்தையே பிடுங்கி அடிக்கும் மாஸ் ஹீரோக்கள், இதுபோன்ற யதார்த்த
படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய ஆச்சர்யம். அதிலும் பஞ்ச் டயலாக்
இல்லாத விஜய் எந்த இடத்திலும் நம்மை அலுக்க விடவில்லை. கதை மேலிருக்கும்
இவரது நம்பிக்கைக்கு முதல் சபாஷ். இந்த படத்திற்கு பிறகு விஜய்யை
பிடிக்காதவர்களுக்கும்அவர் மீது ஒரு ஈர்ப்பு வரும்.
'மச்சி, ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்கிற பார்வையோடு ஜீவாவை பார்க்க
வருகிற ரசிகர்களுக்கு அதிர்ச்சி நிச்சயம். டோட்டலாக
மாற்றியிருக்கிறார்கள் இவரை. ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு ஏறுமுகத்தை
தரப்போகிற படமாக கருதலாம். ஷங்கர் கொடுத்த இந்த வாய்ப்பை தவற விடாமல்
பிடித்துக் கொண்டிருக்கிறார் அவரும்.
முரட்டு வாத்தியாராக வருகிற சத்யராஜ் மாணவர்களை படுத்துகிற சம்பவங்களும்,
போடுகிற தில்லாலங்கடி ரூட்டுகளும் அதிர்ச்சி ரகம். இதற்குப்பின் இதுபோன்ற
பல நு£று வாத்தியார்களை 'நண்பன்' திருத்தினாலும் ஆச்சர்யமில்லை.
நடிகைகளை பிடித்தாட்டும் 'ஒல்லிமேனியா' இலியானாவையும் விட்டு
வைக்கவில்லை. ஐயோ பாவம் விஜய். டூயட் காட்சிகளில் இலியானாவின் எலும்பு
இவரை குத்தாமல் விட்டிருக்காது.
நண்பனின் ஆகப்பெரிய பலம் மதன் கார்க்கியின் வசனங்களே. 'ஏ.ஆர்.ரகுமானோட
அப்பா அவரை கிரிக்கெட் கத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தி,... டென்டுல்கரோட
அப்பா அவரை மியூசிக் டைரக்டரா ஆகச்சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தா என்ன
ஆகியிருக்கும்...?' இதுபோல படம் நெடுக கொட்டிக் கிடக்கின்றன வைரஊசிகள்.
பட்டத்து யானையை பர்மா பஜாரில் திரியவிட்ட கதையாக அவ்வப்போது சில
படங்களில் மாட்டிக் கொள்ளும் ஹாரிசுக்கு, இந்த படம் அரண்மனை பூந்தோட்டம்.
பின்னணி இசைதான் யானை புகுந்த வாழைக் கொல்லையாகியிருக்கிறது.
படம் முழுக்க ஜட்டியை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள், யாராவது,
யாரிடமாவது! பேசாமல் 'டேன்டக்ஸ்' கம்பெனியிடம் பிராண்டிங்
வாங்கியிருந்தால், பட்ஜெட்டில் பாதியை ரிலீசுக்கு முன்பே
கைப்பற்றியிருக்கலாம்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நம்மையும் திரைக்குள் இழுத்துக் கொள்கிறது.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய 'குக்'கெல்லாம் சேர்ந்து சமைத்த இனிப்பு.
ருசிக்காமல் இருக்குமா? நண்பன்- மனசுக்கு பக்கத்தில்!
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger