News Update :
Home » » சூப்பர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்கலாம் ஆனால் பவர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது

சூப்பர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்கலாம் ஆனால் பவர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது

Penulis : karthik on Monday, 30 January 2012 | 07:46

லத்திகா என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தமிழ்த் திரையுலகுக்குப்
பெருமை சேர்க்கக் கூடிய, வரலாற்றுக் காவியத்தைப் படைத்து அதை
ரசிகர்களுக்காக நல்லமுறையில் சமைத்து, படையலிட்டு தொடர்ந்து அதை ஓட்டிக்
கொண்டிருக்கும் உலகசாதனையாளர்தான் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன். தற்போது
ஆனந்த்த தொல்லை உள்பட ஏகப்பட்ட படங்களைக ஏக காலத்தி்ல தயாரித்து
பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். அதிலெல்லாம் அவருக்கு
அட்டகாசமான வேடங்களாம்- அதை அவரே அவரது வாயால் சொல்லிக்
கொண்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரே
சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம் நம்ம பவர் ஸ்டார். (பவர் ஸ்டார்
யார் என்று தெரியாதவர்கள், தமிழ்த் திரையுலக ரசிகர்களாகவே இருக்க
லாயக்கற்றவர்கள்!. காரணம், அந்தளவுக்கு எந்த ஒரு ஸ்டாரும் கொடுக்காத மகா
மெகா ஜிகா சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும், கடைசி நடிகரும்
இவர்தான்!!)
அந்தப் போட்டோவை காட்டுங்க பவர்ஸ்டார் என்று வேண்டி விரும்பிக்கேட்டுக்
கொண்டால் வெட்கப் புன்னகையுடன் எடுத்துக் காட்டுகிறார். அதில் உலக நாயகன்
கமல்ஹாசனுடன் பளீர் சிரிப்புடன், அடக்கம் ஒடுக்கமாகஅருள் பாலிக்கிறார்
நம்ம பவர் ஸ்டார். எங்கங்க இதைப் புடிச்சீங்க, மெரீனா பீச் பக்கமா!!
என்று கேட்டால் டென்ஷனாகி விடுகிறார்.
சமீபத்தில் நாரதகான சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகள் நடன
நிகழ்ச்சிநடந்ததல்லவா. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த
நிகழ்ச்சியில் நம்ம பவர் ஸ்டாரும் பங்கேற்று ஒரு ஓரமாக உட்கார்ந்து
நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் நிகழ்ச்சி
முடிந்து விட்டுக் கிளம்பியபோது, வேகமாக ஓடிச் சென்று தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டு போய் ஒரு ஸ்டில் எடுத்து விட்டாராம்.
அந்தப் புகைப்படத்தைத்தான் தற்போது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாம் நம்ம
பவர் ஸ்டார். இந்தப் புகைப்படம் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய விஷயம்
என்று புளகாங்கிதத்தோடு கூறி வருகிறார் பவர் ஸ்டார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger