சிம்புவின் ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது, அதிசயிக்க வைக்கிறது என்று மல்லிகா ஷெராவத் சிலாகித்துக் கூறியுள்ளார்.
ஒஸ்தி பாடலில் சிம்பவுடன் சேர்ந்து ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறார் மல்லிகா ஷெராவத் என்பது நினைவிருக்கலாம். அந்த அனுபவம் குறித்து தற்போது சிலாகித்துப் பேசியுள்ளார் மல்லிகா. சிம்புவின் ஆட்டத் திறமையும், ஸ்டைலும் வியக்க வைப்பதாகவும், அதிசயிக்க வைப்பதாகவும் அவர் பாராட்டித் தள்ளியுள்ளார்.
மணிரத்தினத்தின் குரு படம் மூலம் தமிழுக்கும் வந்தார் மல்லிகா. பின்னர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்தார். தற்போது சிம்வுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஒஸ்தி படத்தில் மல்லிகா செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறாராம். ஆனால் அவரோ சிம்பு குறித்து சிலாகித்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அழர் கூறுகையில், சிம்புவின் ஆட்டத் திறமையும், அவரது ஸ்டைலும் கலக்கலாக இருக்கிறது. அதைப் பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். அதிசயித்தேன்.
எந்த ஹீரோவும் இப்படி ஒரு அசாத்தியமான திறமையுடன் இருப்பதை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஒஸ்தி படப் பாடல்கள் செம ஹிட்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிம்புவின் டான்ஸைப் பார்த்து அசந்து போன நான் இதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் டான்ஸ் காட்சிகளையும் வீடியோவில் பார்த்து ரசிக்க ஆர்வமாக உள்ளேன். அந்த அளவுக்கு சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்.
என்ன மாதிரியான ஸ்டைலில் ஆடச் சொன்னாலும் அசத்தி விடுகிறார் சிம்பு. ஒரு அபாரமான டான்ஸர் அவர் என்று புல்லரித்துப் பேசுகிறார் மல்லிகா.
அடடா, மல்லிகாவை அசத்திய அப்படிப்பட்ட ஆட்டத்தை சீக்கிரமாக ரசிகர்களுக்கும் காட்டுங்கப்பா...
Post a Comment