அஜீத், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பில்லா 2' . சக்ரி இயக்க, யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23 நாட்களாக கோவாவில் நடைபெற்று வந்தது. கோவாவில் நடைபெற்ற இறுதி நாள் படப்பிடிப்பு அன்று நாயகி பார்வதி ஒமணக்குட்டன் பெரிய கேக் ஒன்றை கொண்டுவந்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம்.
அஜீத்தை கேக் வெட்ட சொல்ல, அஜீத்தோ 'நான் எதற்கு இயக்குனர் சக்ரி தான் இப்படத்தின் நாயகன்' என்று கூற, இயக்குனர் கேக் வெட்டி இருக்கிறார்.
அஜீத் கேக்கை அனைத்து படக்குழுவினருக்கும் கொடுக்க, படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.
'பில்லா 2' படத்திற்காக பனிப்புயல் காட்சி ஒன்றை எடுக்க தீர்மானித்து இருக்கிறாராம் சக்ரி. அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியையும் பனி படர்ந்த மழைகளில் எடுக்க தீர்மானித்து இருக்கிறாராம்.
3ம் கட்ட படப்பிடிப்பு தெற்கு ஐரோப்பாவில் உள்ள Georgia என்ற இடத்தில் நடைபெற உள்ளது
Post a Comment