ஆங்கில திரைப்படங்கள் போன்று இப்போது தமிழிலும் பார்ட் 2,3 என்று தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பில்லா படத்தின் இரண்டாம் பாகமான பில்லா 2ல் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். அடுத்து ஏ.எம். ரத்னம் தயாரிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்திலும் அஜித் நடிக்க உள்ளார் என்னும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் அஜித் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகமான பாட்ஷா 2ல் நடிக்கவிருக்கிறார் என்னும் செய்தியும் மெல்ல அரசல்புரசலாக கோடம்பாக்கத்தில் கசிந்து கொண்டிருக்கிறது.
ரஜினி நடித்த படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் பாட்ஷா. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது முன்னணி தயாரிப்பு நிறுவனம். ராணா பட வேலைகளில் ரஜினி இனி பிஸியாகிவிடுவார் என்பதால் அவரிடம் கால்ஷீட் கேட்க முடியாது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பு நிறுவனம் அஜித்திடம் கால்ஷீட் கேட்க உள்ளது.
ரஜினி நடிக்காவிட்டால் அவருக்கு பதில் அந்த இடத்தை நிரப்பும் வகையில் நடிக்கும் நபர் யராக இருக்கும், தயாரிப்பு நிறுவனம் டிக் பண்ணியது அஜித்தைத்தான். அஜித் ஓ.கே. சொல்லிவிட்டால் பாட்ஷா 2ஆம் பாகம் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் விரைவில் துவங்கக்கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.
Post a Comment