கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வித பாதுகாப்பு அம்சங்கள் உயர் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர் விக்க தெர்மோசெட் மூலம் நீரை செலுத்தும் முறை பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் சூடு அதிகமாக இருந்தால் அதை குளிர்விக்க ரேடியேசன் சேப்டி செய்யப்பட்டுள்ளது. கோர் உருகும் போது கதிர்வீச்சு ஏற்படாமல் இருக்க கோர் கேச்சர் பயன்படுத்தப்படுகிறது.
மொத்தத்தில் கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.ர்.
Post a Comment