எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று நயன்தாரா கொடுத்த அறிக்கை, இன்னும் அறிக்கை லெவலிலேயே இருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை பற்றி யோசிக்கவே இல்லை மாஸ்டர்.
ஆனால் அடுத்தடுத்த அம்புகளால் மனம் நோக வைக்கிறார்களாம் இவரை. எப்படி? இதுவரை நயன்தாராதான் பிரபுதேவாவுக்கு கடிவாளம் போட்டு வந்தார். என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறார் அவர். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் மாஸ்டர்.
வெட்டி விட்டாச்சு. அப்புறம் எதுக்கு அந்த வீட்டு சகவாசம்? இனிமேலாவது புது வாழ்க்கையை பற்றி யோசி என்கிறாராம் மகனிடம். கண்ணுக்கு தெரியாத கம்பி வலையாக சுற்றிக் கொண்டிருக்கிறது பழைய பாசம். அவ்வளவு சீக்கிரம் அறுத்தெறிய முடியுமா என்ன?
சமையல் குறிப்பை படித்தே பசியாறுவது போலதான் சட்டத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதும்!
Post a Comment