84வது ஆஸ்கர் விருதுக்கு "தி அட்வென்சர் டின்டின்", "குங்குபூ பாண்டா 2" உள்ளிட்ட 18 அனிமேஷன் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இருந்து பல்வேறு மொழி படங்கள், இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல் இந்தாண்டும், 2012ம் ஆண்டு பிப்.,26ம் தேதி நடக்க இருக்கும் 84வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை இப்போதே ஆரம்பமாகிவிட்டன. முதற்கட்டமாக அனிமேஷன் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதில் ஸ்டீவன் ஸ்பெல்பர்க்கின் தி அட்வென்சர் டின்டின், குங்குபூ பாண்டா 2, ரியோ அண்ட் ரேங்கோ, புஷ் இன் பூட்ஸ், கார்ஸ்-2, ஹப்பி பீட் உள்ளிட்ட 18 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் எந்த படம் ஆஸ்கர் விருது வாங்கபோகிறது என்பது 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தான் தெரியும்.
Post a Comment