2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரியுள்ளார்.
இம்மனு மீதான விசாரணை வருகிற அக்.17-ம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. தரப்பில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
ஆகையால் இவ்வழக்கில் இருந்து கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது.
முன்னதாக, கனிமொழியின் வக்கீல் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஒரு பெண் என்பதாலும், சிறு வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் அவருக்கு இவ்வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment