பள்ளியில் சக ஆசிரியருக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்த டீச்சர் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் பள்ளிக்கு திரும்பினார். உள்ளாடை விளம்பரத்துக்கு அவர் போஸ் கொடுத்த படங்கள் வெளியானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஹாரோ நகர பள்ளியில் கலை ஆசிரியையாக வேலை பார்த்தவர் ஜோன் சலி (34). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். வடக்கு அயர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாலே நடனம் தெரிந்தவர். பகுதி நேரமாக டிவி நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்குபவர்.
கடந்த மார்ச்சில் பள்ளியின் போட்டோலேப் அறையில் இருந்த பென் டிரைவ் ஒன்று மாணவர்களின் கையில் சிக்கியது. அதை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்.. சலி டீச்சரின் டாப்லெஸ் போட்டோக்கள் அதில் இருந்தன. மாணவர்களின் செல்போன்கள் சரமாரியாக டாப்லெஸ் போட்டோக்களை பரிமாறிக் கொண்டன. பள்ளியே பரபரப்பானது. பெற்றோர்கள் கொதித்தனர். விஷயம் பூதாகரமானது. பள்ளியில் விசாரணை நடந்தது. பள்ளியின் சக ஆசிரியரும் போட்டோகிராபருமான பியோனா கோர்த்தின் என்ப வருக்கு ஒரு பிராஜக்ட்டுக்காக சலி டீச்சர் தாராளமாக போஸ் கொடுத்தது தெரிய வந்தது.
அவரது தொழில் சம்பந்தமான செயல்களில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், கண்ணியம் காக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்று அறிவுறுத்தியது. இதையடுத்து, பள்ளியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சலி. இந்நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு ஹாரோ பள்ளியில் மீண்டும் ஆசிரியை பணிக்கு திரும்பியிருக்கிறார் சலி. ''எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டன. இனி என் ஆசிரியர் தொழிலை கண்ணிய குறைவின்றி செய்வேன்'' என்று பேட்டியளித்திருக்கிறார் சலி. இதற்கிடையில், ஒரு பிரபல ஷோரூம் சார்பில் உள்ளாடை விளம்பரத்துக்கு சலி போஸ் கொடுத்த போட்டோக்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Post a Comment