26/11 தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் மரண தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கடந்த மே மாதம் பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கசாப் மும்பை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். அவனது மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. மும்பை உயர் நீதிமன்றமும் கசாபின் மரண தண்டனையை உறுதிசெய்தது.
இதையடுத்து கசாப் உச்ச நீதிமன்ற்ததில் மேல் முறையீடு செய்தான். அதற்காக தனது சார்பில் வாதாட ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு கசாப் இலவச சட்ட மையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதன்படி கசாப்பின் மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கசாபின் மனு நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கசாப் சார்பில் ராஜு ராமச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கசாபின் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
Post a Comment