News Update :
Home » » சிரஞ்சீவி மகனுக்கு ரூ.120 கோடி வரதட்சணை:குட்டி விமானம் பரிசு

சிரஞ்சீவி மகனுக்கு ரூ.120 கோடி வரதட்சணை:குட்டி விமானம் பரிசு

Penulis : karthik on Monday, 10 October 2011 | 02:26

 
 
 
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் 1980-ல் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். சென்னை, ஊட்டியில் படித்தார். நன்றாக தமிழ் பேச தெரிந்தவர். 2007-ல் சிறுத்த என்ற தெலுங்கு படம் மூலம் ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமானார். 2009-ல் அவர் நடித்த மகதீரா படம் ரிலீசாகி ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடியது. நிறைய விருதுகளையும் பெற்றார். இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப் பட்டது.
 
ராம்சரண் தற்போது ரச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மணமகள் உபாசனா கேமினேனி. இது காதல் திருமணம் ஆகும். மணமகள் அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும குடும்பத்தை சேர்ந்தவர். திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவியுள்ளது.
 
திருமண பரிசாக நவீன ரக குட்டி விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளதாம். இந்த விமானம் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இம் மாதம் இறுதியில் அதை ஐதராபாத்துக்கு கொண்டு வருகின்றனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger