செல்போன் ரோமிங் கட்டணம் விரைவில் ரத்து செய்யப்படவுள்ளது.
மத்திய அரசின் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வரைவு அறிக்கையை இன்று அந்தத் துறையின் அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.
அதில், நாடு முழுவதும் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது தொலைத் தொடர்பு வட்டங்கள் 22 ஆகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லையில் உள்ள தொலைத் தொடர்பு வட்டத்திற்குள் நுழையும் போது ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரத்து செய்து நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து எந்தப் பகுதிக்குப் பேசினாலும் ஒரே கட்டணம் என்ற முறை அமலாக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையால் செல்போன் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மக்களுக்கு பெரும் பயன் ஏற்படும்.
மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையிலும் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இனி ஸ்பெக்ட்ரம் மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படும்.
நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவையை விரிவாக்கவும், 2017ம் ஆண்டுக்குள் கிராமப் பகுதிகளில் தொலைத் தொடர்பு அடர்த்தியை (rurual teledensity) 60 சதவீதமாக உயர்த்தவும், 2020ம் ஆண்டுக்குள் இதை 100 சதவீதமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment