அசாம் மாநிலத்தில் மனைவி கள்ளத் தொடர்பு வைத்துள்ளாரோ என்ற சந்தேகத்தால் அவரின் தலையை வெட்டி, அதை ஊர்வலமாக எடுத்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஜபோரிகாக் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். அவரது மனைவி அமியா தாய்மரி தாஸ். நர்ஸ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த அவர்களுக்கு விஷால் தாஸ் (8), அஷிம் தாஸ்(6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அமியா தாஸுக்கு கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ரஞ்சித் தாஸுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியின் தலையை துண்டாக வெட்டி, அதை எடுத்துக் கொண்டு தெரிவில் நடந்து வந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் தாஸைப் பிடித்துக் கொண்டு போய் டிஸ்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்தபோது இளைய மகன் அஷிம் வீட்டில் இருந்தான். தாய் கொல்லப்பட்டதில் இருந்து அவனைக் காணவில்லை. மூத்த மகன் விஷால் திருவிழா கொண்டாடுவதற்காக நல்பாரியில் உள்ள தாய்மாமன் வீட்டிற்கு சென்றுள்ளான்.
ரஞ்சித் தாஸ் வீட்டிற்குச் சென்ற போலீசார் அமியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரஞ்சித் தாஸிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
Post a Comment