மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு "இலவச வெப்சைட்' ஏற்படுத்தித்தர மைக்ரோ இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது. மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு, இமெயில் வசதியை ஏற்படுத்தியது இந்நிறுவனம். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச
வெப்சைட் வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது. இலவச வெப்சைட்டில் மாணவர்கள் தங்கள் சுயவிபரங்கள்
(பயோடேட்டா) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். போட்டோக்கள், வீடியோ பதிவுகள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் தொலைந்தாலும்கூட, அவற்றை எங்கிருந்தும் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து நகலை பெற வசதி கிடைக்கும். மேலும் பல வெளிநாட்டு வெப்சைட்டுகள் மூலம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், அதற்கும் இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர தற்காலத்திற்கு தேவையான ஆங்கில பேச்சுப் பயிற்சி, நெட் பாங்கிங், டிக்கெட் ரிசர்வேஷன் உட்பட போன்றவற்றை மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் இணையதளத்தை பொறுத்தவரை "அப்டேட்' செய்யும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சியாகவே அளிக்கப்படும். மைக்ரோ இந்தியா அமைப்பின் இயக்குனர் நரேஷ் கூறியதாவது: இதில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டம் உள்ளது. இன்டர்நெட்டை முறைப்படி பயன்படுத்த தெரிந்தால் எளிதாக சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால், அமெரிக்க முதலீடு அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி சம்பாதிக்கவும் வழி ஏற்படும். இதுபோன்ற பயிற்சிகளுக்கு அணுகும் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியை துவக்க உள்ளோம். "இயக்குனர், இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி அமைப்பு, 5, பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-16' என்ற முகவரியில் அணுகலாம். 94433-64567 அல்லது www.yetbo.org என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
Post a Comment