News Update :
Home » » மாணவ சிப்பாய்கள் பயிற்சிக்குச் சென்ற 15 வயது மாணவி திடீர் மரணம்

மாணவ சிப்பாய்கள் பயிற்சிக்குச் சென்ற 15 வயது மாணவி திடீர் மரணம்

Penulis : karthik on Friday, 7 October 2011 | 07:11

 

மாணவர் சிப்பாய்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவமொன்று குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

குருநாகல் – பொல்காஹவெல – ரத்மல்தொட்ட மத்திய மகா வித்தியாலய மாணவிகளுக்கு மாணவ சிப்பாய்கள் பயிற்சி ரன்டெம்பே முகாமில் இடம்பெற்று வருகிறது.

கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது திடீர் சுகயீனமுற்ற மாணவி ஒருவர் அம்பகஹபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger