News Update :
Home » » வெள்ளைக் கொடி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

வெள்ளைக் கொடி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

Penulis : karthik on Friday 7 October 2011 | 08:33

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழங்கு விசாரணைகளின் போது பொன்சேக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு வழங்கப்பட்டதாக அறியக் கிடைத்து எனக் கூறப்பட்டமையும் குற்றமாகும் என்று பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனேக அலுவிஹாரே தெரிவித்தார். அவசரகால சட்டவிதிமுறைகளை மீறி இனவாத உணர்வுகளைத் தூண்டும் மற்றும் மக்களை குழப்பமடையச் செய்யும் கருத்தினைத் தெரிவித்தமை சரத் பொன்சேக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களின் உள்ளடக்கமாகும்.

இத்தகைய கருத்தினை சரத் பொன்சேக்கா கூறியமை, சன்டே லீடர் செய்தி ஆசிரியர் பிரெட்ரிகா ஜேய்ன்ஸ் அளித்த சாட்சியத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் குறிப்பிட்டார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிரிகேடியர் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சாட்சியங்களின் பிரகாரம் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த உத்தரவு வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டதாகவும் புவனேக அலுவிஹாரே கூறினார்.

எனினும் அவ்வாறான உத்தரவு வழங்கப்பட்டமை குறித்து இரண்டு ஊடகவியலாளர்கள் ஊடாக தெரியவந்தது என்று சரத் பொன்சேக்காவின் பிரதிவாதி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் தாம் அறிந்த வரையில் அவ்வாறான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என பொன்சேக்கா தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வெள்ளைக்கொடி ஏந்தியவாறு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடப்பட்டதாக வதந்தி பரப்புவதற்கு சரத் பொன்சேக்கா முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் கூறினார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் புதன்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டன.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger