News Update :
Home » » விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

Penulis : karthik on Saturday, 15 September 2012 | 03:33

விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா
விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, செப். 15-

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.ராஜேந்திரன்10.9.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது  மாரடைப்பால் காலமானார். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த சு.சங்கர் 12.9.2012 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந� ��த செய்திகளை அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன். ராஜேந்திரன் மற்றும் சங்கர் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது  குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இருவரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல், மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், துவரிமான் கிராமம் அருகே 9.9.2012 அன்று அரசுப் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கந்தன் மற்றும் சுவாமிநாதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கிராமம் அருகே 10.9.2012 அன்று பழையனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணி மீது சென்� ��ையிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கிராமம், பழையனூர் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சின்னைய்யன் பலத்த காயமடைந்துள்ளார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த கந்தன், சுவாமிநாதன் மற்றும் சுப்பிரமணி ஆகியோரின் குடும்பங்களுக்கு  தலா ஒரு லட்சம்  ரூபாயும், விபத்தில் பலத்த காயமடைந்த சின்னைய்யனுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger