சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு லாலுபிரசாத் வரவேற்பு

ஷாப்ரா(பீகார்), செப்.16-
சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்து அறிவித்து உள்ளது. இதற்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர் களிடம் கூறியதாவது:- சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடைவார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலையை அவர்கள் பெறுவதற்கும் இதனால் நல்லதொரு சூழ்நிலை உருவாகி உள்ளது. தன் மூலம் உலக அளவிலான தரமான பொருட்களை பொது மக்கள் தேர்வு செய்து வாங்கி பயன் அடைவார்கள். சில்லரை வர்த்தக நிறுவனங்கள் � �னைத்தும் குளிரூட்டப்பட்ட கடைகளை அமைத்து நுகர்வோர்கள் நிதானத்துடன் நல்ல தரமான பொருட்களை தேர்வு செய்து வாங்குவதற்கு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தரமான மளிகை பொருட்கள், உலக அளவிலான உணவு பொருட்கள், பழங்கள் போன்ற பலவகையான பொருட்கள் இங்கு கிடைக்கும் வகையில் இந்நிறுவனங்கள் அமையும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அன்னிய நேரடி முதலீடுக்கு எங்களது கட்சி உறுதி� ��ான முழு ஆதரவை தெரிவிக்கும். இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு நாங்கள் எங்களது ஆதரவை மத்திய அரசுக்கு அளிப்போம். இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறினார்.
Post a Comment