டீசல் விலையை குறைக்கக்கோரி 17 ந்தேதி பா.ஜனதா போராட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை, செப். 15-
தமிழக பா. ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட 2004-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல், மண்எண்ணை மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை பல முறை உயர்த்தி உள்ளனர். தற்போது டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.5-க்கு மேல் உயர்த்தியதோடு, சமையல் எரி வாயுவின் விநியோகத்திலும் கட்டுப்பாடு விதித� ��து ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தான் சலுகை விலையில் கொடுக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள். சர்வதேச அளவில் பெட்ரோல், கச்சா எண்ணெய் விலை இறங்கி வரும் வேளையில் இந்திய அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. எற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறி வருகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் தொகையும் ஆண்டுதோறும� �� பெருகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் டீசல் விலையை ஏற்றியிருப்பது எரிகிற தீயில் எண்ணை விட்டதற்கு சமமான ஒன்று. இதனால் அத்தியாவசிய பொருளின் விலையும் ஏற உள்ளது. வறியோரின் வாழ்க்கை மேலும் வறண்டு போகும் ஆபத்து உள்ளது. சமையல் எரிவாயு ஆண்டுக்கு 6 சிலிண்டர் சலுகை தான் என்ற விதிமுறை மேலும் நம் பெண்களை வாட்டும் கொடுமையாக அமைந்துள்ளது. இந்நேரத்தில் வாஜ்பாய் பிரதமராக இரு� �்தபோது ஏற்கனவே ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு இரண்டாவது சிலிண்டரை கொடுத்து பெண்களின் சிரமத்தை குறைத்ததை நன்றியோடு நினைவில் கொள்கிறோம். ஆண்டுதோறும் 12 சிலிண்டராவது கொடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதுடன் ஏற்றிய டீசல் விலையை குறைக்கவும் வலியுறுத்துகிறோம். இப்பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சென்று நியாயம் கேட்க பாரதீய ஜனதா கட்சி வருகின்ற 17-ந்தேதியிலிருந்து 24-ந்� ��ேதி வரை தமிழகம் முழுவதும் அறப்போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment