அன்னிய முதலீடு டீசல் விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. பேரணி: வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கைது

புதுடெல்லி,செப்.15-
டீசல் விலை உயர்வு மற்றும் மல்டிபிராண்ட் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து டெல்லியில் இன்று பாரதீய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து, பாராளுமன்றம் நோக்கி தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும ் என்ற கோஷத்துடன் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வெங்கையா நாயுடு, வி.கே.மல்கோத்ரா, விஜய் கோயல், விஜேந்தர் குப்தா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். முன்னதாக போராட்டக் காரர்களிடையே வெங்கையா நாயுடு பேசுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் போன்ற பல்வேறு முறைகேடுகளை திசை திருப்ப விரும்புகிறது. அதனால்தான் டீச� �் விலை உயர்வு முடிவை எடுத்துள்ளது.டீசல் விலை உயர்வை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகள், விவசாயிகளுடன் இருக்க விரும்புகிறார்களா அல்லது அரசுடன் இருக்கப்போகிறார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும். டீசல் விலை உயர்வை அரசு வாபஸ் பெறச் செய்ய வேண்டும்.அல்லது அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கி� ��்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Post a Comment