சென்னை, செப். 15-
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் எடுத்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை த.மு.மு.க.வினர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப� ��்டது.
சிலர் தூதரகம் மீது கற்கள் வீசினர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா படமும், அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டன. அலுவலக கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. போலீஸ் பூத்தும் தாக்கப்பட்டது.
இதையடுத்து,போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளதால், தூதரகத்திற்கு ஏன் சரியான பாதுகாப்பு அளிக்கப்பபடவில்லை? என்று தமிழக அரசாங்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை தவுகித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் பீட்டர்ஸ் சாலையில் தடுத்து நிறத்தினார்கள்.
போராட்டத்தில் பங்கேற்றோர் அமெரிக்க ஜனதிபதி ஒபாமாவின் படத்தை எரித்தனர். அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் அமெரிக்க தூதரகம் அருகே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அண்ணா சாலையிலும் அருகிலுள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
home
Home
Post a Comment