உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மறுப்பு: அகிலேஷ் யாதவ்

லக்னோ, செப்.15-
நாடுமுழுவதும் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உத்திர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கவில்லை. எனவே, உத்தரபிரதேசத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
Post a Comment