ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன் பேட்டி

சென்னை, செப்.15-
தமிழக வக்பு வாரிய தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இவர் இன்று சென்னை வக்பு வாரிய அலுவலத்தில் பதவி ஏற்றார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முகமது ஜான், வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜர்ஜலீல், இஸ் மாயில் கனி, கவுன்சிலர்கள் அலிகான் பஷீர், இம்தியாஸ் மற்றும் கிதியோன் ராஜ், ராஜசேகரன், எஸ்.எம். பிள்ளை, செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்புக்கு பிறகு தமிழ்மகன் உசேன் கூறியதாவது:-
12-வது வக்பு வாரிய தலைவராக என்னை பணியாற்ற உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் 6,800 வக்பு நிறுவனங்கள் உள்ளன. இதை கண்காணிப்பதும், வழி நடத்துவதும், சொத்துக்களை பாதுகாப்பதும் முக்கிய கடமைகளாகும். இந்த பணிகளை செவ்வனே நிறைவேற்றி முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் செயல்படுவேன். வாரிய சொத்துக� ��களை மேம் படுத்தி வருமானத்தை அதி கரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துக்கள் பாதுகாக்கப்படும். இஸ்லாமிய மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலை மேம்பட நானும், உறுப்பினர்களும் தேவையான முயற்சிகள் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment