அது என்றால் எது என்று குழம்ப வேண்டாம். ஒரு அப்பாவி தயாரிப்பாளர் தந்த நாற்பது லட்ச அட்வான்ஸ்தான் அது.
விக்ரமை வைத்து மோகன் நடராஜன் தெய்வத்திருமகள் படத்தை எடுத்தார் அல்லவா? அதற்கு முன்பு பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம், இலியானாவை வைத்து அவர் படம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக இலியானாவுக்கு 40 லட்சம் அட்வான்ஸ் தரப்பட்டது. திடீரென பூபதி பாண்டியன் செட்டாகாமல் போக விக்ரம் குமாருக்கு தாவினார். அவருடனும் சீயானுக்கு சிக்கல். கடைசியாக செட்டானவர்தான் விஜய்.
இந்த கோ கோ ஆட்டத்தில் அட்வான்சுடன் பாதியிலேயே கழண்டு கொண்டார் இலியானா. சரி, ஆள்தான் இல்லை, அட்வான்சாவது மிஞ்சுமா என்று தயாரிப்பாளர் அலைந்ததுப் பார்த்தும் இலியானா இஞ்சி மொரப்பா பதில்தான் தந்து கொண்டிருக்கிறார். என்னுடைய கால்ஷீட்டை படம் எடுக்காமல் வீணடித்துவிட்டதால் நஷ்டஈடாக நாற்பது லட்சத்தை அட்ஜஸ்ட் செய்துக்கிறேன் என்று அதிர்ச்சி தந்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இலியான மீது புகார் தந்து நீதிக்காக காத்திருக்கிறார் மோகன் நடராஜன்.
Post a Comment