News Update :
Home » » புகைப்படங்களில் அகப்படும் விரும்பத்தகாத காட்சிகளை இலகுவாக அகற்ற புதிய ஐ போன் மென்பொருள்!

புகைப்படங்களில் அகப்படும் விரும்பத்தகாத காட்சிகளை இலகுவாக அகற்ற புதிய ஐ போன் மென்பொருள்!

Penulis : karthik on Thursday, 16 February 2012 | 01:45

மென்பொருள்!
 

கமெரா போன்கள் பயன்படுத்துபவர்கள் அவர்களின் பயணங்களின் போது தென்படும் பிடித்தமான இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து மகிழுவார்கள்.எனினும் சில சந்தர்ப்பங்களில் அப்புகைப்படங்களில் அவர்கள் எதிர்பார்க்காத காட்சிகளும் அகப்பட வாய்ப்புண்டு. எனவே அக்காட்சிகளை நீக்குவதற்கு இதுவரை காலமும் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அதற்கான சிறந்த தீர்வொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது ஐ போன்களில் பயன்படுத்தக்கூடிய கமெரா மென்பொருள் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களில் அகப்படும் அநாவசியமான அல்லது விரும்பத்தகாத காட்சிகளை இலகுவாக அகற்ற முடியும்.

உதாரணமாக குறித்த காட்சியில் படமாக்கப்பட்ட சில மனிதர்களை நீக்க வேண்டுமாயின் இம்மென்பொருளை பயன்படுத்தி அவர்களை அப்புகைப்படத்திலிருந்து இலகுவாக நீக்கிவிட முடியும்.

ஆனால் இந்த மென்பொருளானது அன்ரோயிட் இயங்குத்தளத்தில் மட்டுமே செயற்படும் என்பது ஒரு குறையாக காணப்படுவதுடன் இம்மென்பொருளை பயனர்கள் பாவிக்கும் போது இடைமுகத்தில் சில குறைபாடுகள் அல்லது கடினத்தன்மை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Click here to view the embedded video.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger