News Update :
Home » » தேவர் தொலைக்காட்சி நிறுவனருக்கு பிடிவாரன்ட்! பொய் வழக்கின் தொடர் சதி!

தேவர் தொலைக்காட்சி நிறுவனருக்கு பிடிவாரன்ட்! பொய் வழக்கின் தொடர் சதி!

Penulis : karthik on Thursday, 16 February 2012 | 20:26


தேவர் தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அவர்களுக்கு 13.02.12 காரைக்குடி நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தேவர் தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அளித்த செய்தியில் "
தமிழீழ பிரச்சனையில் எங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட காலத்தில் எங்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்தோம். அதில் ஒன்றான பொய் வழக்கு 25.07.2009 அன்று பெண் உதவி ஆய்வாளரை கொலை முயற்சி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் துணைச் சிறையில் எங்கள் குழுவை சேர்ந்த மூவரை அடைத்தனர். தமிழ் தேசியம், தமிழ் ஈழ விடுதலைக்காக எங்களை ஒப்படைத்திருந்த போது எங்கள் வழக்கின் பின்னணியில் ஒரு சாதி வன்மம் இருந்ததை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.
" காரைக்குடி வடக்கு காவல்நிலையம் அப்போது அதன் ஆய்வாளராக இருந்தவர் அண்ணாத்துரை. இவர் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவரும் பள்ளர் சமூகத்தை சார்ந்தவரும் ஆவார். இவர் தற்போது தேவகோட்டையில் பணியாற்றிவருகிறார். காரைக்குடி பகுதியில் தேவர் சமூக மக்கள் இவரால் பெரிதும் பாதித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த சாதியென்று விசாரித்த பின்னரே இவரது செயல் அரங்கேறும். இந்தச் சூழ்நிலையில்தான் எங்களது போராட்டத்தின் மீது அடக்கு முறையை பல வழிகளில் முடக்குவதில் தீவிரம்காட்டினார் அண்ணாத்துரை.
இந்த வழக்கு தொடரும் ஒரு நாளுக்கு முன்னர் ஈழத்தில் கொத்துக்குண்டு போட்டு ஒரே நாளில் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தியறிந்து அதனை எதிர்த்து காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது என்னுடன் தோளோடு தோளிருந்தவர் முதுகுளத்தூர் அருகே உள்ள பூசெரி கிராமத்தை சேர்ந்த திரு தமிழ்மணி, இவர் பள்ளர் சமூகத்தை சார்ந்தவர். எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே நோக்கத்திற்காக போராடி வந்தோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் எங்கள் போராட்டம் பரவியது.எங்கள் குழுக்கள் பரவலாக சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் போராட்டங்களை வழிநடத்தி வந்தனர். நாங்கள் அப்போது காரைக்குடியில் தொழில் நிமிர்த்தமாக வசித்து வந்ததால் எங்களை அடக்கும் முழு வாய்ப்பையும் அண்ணாத்துரைக்கு வழங்கப்பட்டது.
25.07.2009 அன்று காரைக்குடியில் தமிழர் பண்பாட்டுக் கழகம் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்று எங்கள் கருத்துக்களை பரிமாறிவிட்டு வந்து கொண்டிருந்த போது திட்டமிட்டே வரும் வழியில் காவலர்களை நிறுத்தி எங்களை நாகரிகமற்ற வார்த்தையில் பேசினார். வேண்டுமென்றே ஏதோ ஒரு வழக்கு பதிவை செய்து விட்டு அந்த வழக்கு ரசீதை அவர்களே கிழித்தனர். எங்களை கோபத்திற்கு ஆளாக்கும் செயல்களை செய்கிரார்களை என்பதை உணர்ந்த நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அதைத்தொடர்ந்து காவல்துறை எங்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தேவையான வேலைகளில் ஈடுபடுவதாக காவல் நிலையத்திலிருந்தே செய்திகள் வந்தது. உடனே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பும் பொழுது காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. காவல் நிலையம் வந்து செல்லும்படி கூறினார். அதன் பெயரில் நானும் , திரு தமிழ்மணியும் தினத்தந்தி அலுவலகம் சென்று எங்களின் நிலையை செய்தியாக எழுதிக் கொடுத்துவிட்டு காவல்நிலையம் சென்றோம்.. அவ்வளவுதான் அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள் . தனது இருக்கையிலிருந்து எழுந்து வேகமாய் வந்த அண்ணாத்துரை " ஏன்டா தேவரா நீ? உனக்கு கொடுக்குற அடி உன் சாதிக்கே வலிக்கனும் என்றார். அதர்ந்து போனேன்! சாதியா? ஒரு நொடிப்பொழுதில் ஓராயிரம் கேள்விகள் மனதில் வந்து போயின.

போலிசுக்கு எதிராவே செய்தி கொடுத்துட்டு வாரியா !என்று என் கன்னத்தில் அரைந்தார். அருகில் இருந்த தமிழ்மணிக்கும் ஒரு அரை! அருகிலிருந்த மூன்று லத்தியை முறித்து சாதனை புரிந்த அண்ணாத்துரை இருக்கும் காவலர்களை எல்லாம் அழைத்து அவரவர் திறமையை காட்டச் சொல்லி மிரட்டினார். 15 காவலர்கள் ஒரு அறைக்குள் எங்கள் இருவரையும் இழுத்துச் சென்று தாக்க ஆரம்பித்தனர். இருவரும் கூட்டத்துக்கு நடுவே கிடக்கின்றோம், 30 பூட்ஸ் கால்கள் உடலெல்லாம் பதம்பார்த்துக் கொண்டிருந்தது. அடிச்சத்தத்தை தவிர அங்கே நாங்கள் எந்தக் குரலையும் எழுப்பவில்லை. "ஆதராவாக இருக்கும் நமக்கே இந்த நிலையென்றால் அங்கே போராடும் மக்களுக்கு? " என்ற கேள்வியே இருவர் மனதிலும். அந்த பதினைந்து பேர் அடித்து முடித்ததும் மீண்டும் அண்ணாத்துரை அறைக்குள் நுழைந்து சுவரோரமாய் உட்கார வைத்தார். கைகளை நான்கு காவலர்களை பிடிக்கச் சொல்லிவிட்டு கால்களை இரு கோணங்களில் இழுக்கச் சொன்னார் . இரண்டு காவலர்கள் அந்த கடமையை நிறைவேற்றினர். இரண்டு கால்களையும் இரு துருவங்களில் பிளந்தனர். அப்போது செங்கோணத்தில் விறைப்பாய் இருந்த விரல் பகுதிகளை அப்படியே மிதித்து ஒடிக்க முயற்சித்தனர். நானும் ஓடிந்ததாகவே அப்போது கருதினேன். பல்வேறு சித்ரவதைக் கலைகளை எங்கள் மீது பாய்ச்சினார் அண்ணாத்துரை!

ஒருவழியாக முக்கால் மணிநேரம் அவர்களது கடமையை நிறைவேற்றி சென்றனர். அறையிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டோம்.பெண் உதவி ஆய்வாளர் ஆல்பின் பிரிஜித் மேரி அவர்களை வரவழைத்தார் . நான் சொல்வதை எழுது என்றார். தயங்கினார் ஆல்பின் பிரிஜித் மேரி! "என்னமா? எழுது" என்று எங்களுக்கு எதிராக மனுவை வாங்கிக் கொண்டார். வழக்கு பதியப்பட்டது.
அடுத்து ? எங்களின் மனத்துள் இருந்த ஒரே கேள்வி. அண்ணாத்துரையின் ஜீப் டிரைவர் ஞானம் ! "என்னடா நல்லா வாங்கிருக்ரிங்க போல! இருங்க ட்ரைனிங் போலிஷ் இருக்காங்க அவுங்கள வர சொல்றேன் என்று ஆறு பயிற்சி காவலருக்கு எங்களை வைத்து சொல்லிக் கொடுத்த்தார். அவர்கள் அடிப்பார்கள் ... அப்படி அல்ல என்று டிரைவர் ஞானம் அடித்துக் காட்டுவார். இப்படியாக அன்று மூன்று மணி நேரமும் எங்களை மாற்றி மாற்றி அடித்து சித்ரவதை செய்தனர். அன்று மதிய உணவு கொடுத்தார்கள் நாங்கள் இருவரும் சற்று நேரம் பார்த்து சிரித்துக் கொண்டோம். எங்கள் அருகே ஒரு போலிஷ் " சாப்டுங்க தம்பி! உங்கள நினச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு! நான் இங்கே உங்களை அடிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. என்னால் அடிக்காமல் இருக்கத்தான் முடியும்,சாப்பிடுங்க சாப்பிடுங்க "என்று அவர் கண்கள் கலங்கின. எங்களுடன் அவரும் ஒரு பார்சலை பிரித்தார். எங்களுக்கு வேண்டாம் என்று அமைதியாகிவிட்டோம். அவரும் மூடி வைத்துவிட்டார். அவர் எங்களுக்காக பட்டினி மட்டுமே கிடக்க முடிந்தது. சில விசயங்களை எங்களிடம் பரிமாறிக் கொண்டார். அந்த செய்தியே " நெற்றிக்கண்" பத்திரிகையில் வெளியானது. அந்த செய்தியின் தலைப்பு " எஸ்.எம்.எஸ் மூலம் செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஆய்வாளர் அண்ணாத்துரை" என்பதுவே!

எங்களை இரவு எட்டு முப்பது மணிக்கு பிடித்ததாகவும் , அதன் பின்னரே வழக்கு பதியப்பட்டதாகவும் குற்றப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களை அடித்த கையேடு என் நண்பன் தமிழ்மணியை கையில் விளங்கோடு சுமார் மூன்று மணிக்கு நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துப்போய் அறைகளை சோதனை செய்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருட்களை சூறையாடினர். திரும்பக் கேட்டபோது அதே மிரட்டலை அனுபவித்தோம். அன்று காரைக்குடி பகுதியில் சில ஈழ ஆதரவுக் குழுக்கள் இருந்தும் அஞ்சி ஒதுங்கினர். எந்தவித ஆதரவும் எங்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. இப்போது கையை உயர்த்தி கோஷம்போடும் ஈழ ஆதரவுக் கட்சிகளை நாங்கள் முறையிட்ட போது எங்களை காவல்துறையின் கையாலேன்று கருதுவதாக நண்பர்களின் மூலம் அறிந்தோம்.

ஒரு வழியாக அன்று அரை நிர்வாணத்தோடு காவல் நிலைய சிறையில் தூங்கினோம். பலர் வியர்வையில் ஊறிய வெறுந்தரையில் தூங்க வைத்தார்கள். சற்று நேரத்தில் உடலெல்லாம் வியர்த்தது. அருகிலேயே சரிவர சுத்தம் செய்யப்படாத கழிப்பறை நாற்றம்! அந்த ஒருநாள் இரவு இன்னும் மனதிலிருந்து அகலவில்லை.

விடிந்தது! நீதிபதியிடம் அழைத்து சென்றனர். நீதிபதி கேட்பார் நடந்ததை சொல்லிவிடலாம் என முடிவு செய்தோம். நீதிபதி முன் நிறுத்தினர். நீதிபதி கேட்டார் " உங்களை அடித்தார்களா? எங்கள் பதில் ஆம்!" உங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னவென்று தெரியுமா? எங்கள் பதில் தெரியாது!" நீதிபதி அதன் பிறகு கையெழுத்திட்டார். காவலர்கள் " ஏன்டா இவ்வளவு போட்டும் இன்னும் அடங்கலை'ல " என்றபடி காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு கை விளங்கோடு அழைத்துச் சென்றனர். கூட்டமெல்லாம் எங்களை அவரவர் சிந்தனைக்கேற்ப உற்று கவனித்தவாறு இருந்தனர் . சார் இந்த விளங்கை கழற்றுங்கள் நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம், அவமான படுத்தாதீர்கள் என்று முறையிட்ட போது " தீவிர வாதிகளை பின்ன எப்படி கூட்டிட்டு போகணும்? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். பேருந்து வந்தது. ஏற்றினார்கள். திருப்பத்தூர் மருத்துவமனையில் நிறுத்தினர். அங்கே மருத்துவர் " என்ன இப்படி அடிசிருகிங்க? " என்று எங்கள் முன் கேள்விகேட்க தனியே அழைத்துபோய் காவலர் பேசினார்... அனைத்து படிவமும் பூர்த்தியாகியது. சிறைக்கு அழைத்து செல்லும்முன் சாப்பிட ஒரு உணவகத்தில் கை விளங்கை அவிழ்த்தனர். சாப்பிட்டோம். சிறைக்குள் அடைத்தனர். பதிமூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் காரைக்குடி வந்தோம். அதன் பிறகும் எங்கள் போராட்டம் தொடர்வதைக் கண்ட அண்ணாத்துரை எங்களின் வருமான வாய்ப்புகளை முடக்கும் வேலையினை கையிலெடுத்தார். எந்த நேரமும் அலுவலகம் முன் ஒரு காவலர் நின்று கொண்டு வருவோரை மிரட்டும் கேவலமான போக்கை கடைபிடித்தனர். ஒருவழியாக அலுவலகம் மூடும் நிலைக்கு கொண்டு வந்தார். என் தொடர்பான அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் கட்டிட உரிமையாளர் மிரட்டப்பட்டு காலி செய்ய வைத்தனர். இப்படியே எங்களுக்கும் அண்ணாத்துரை துறைக்குமான மோதல்கள் தொடர்ந்து வந்தன...

இந்த வழக்கு தொடர்பான சம்மன் எனக்கு வழங்கப்படாமலேயே நீ நேரில் வந்து வாங்கிக்கோ என்று காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் அப்போது சென்னையில் இருந்து வந்தேன். எனது முகவரிக்கு கொண்டு பொய் சேர்க்குமாறு கோரியும் அதை செய்ய மறுத்தனர். ஊர் வருவதற்கு அவர்களுக்கு என்ன அச்சமோ , கூச்சமோ தெரியவில்லை. அதற்கிடையே " நெற்றிக்கண் அண்ணாத்துரை செக்ஸ் டார்ச்சர் நியூஸ் " வேற புயலைக் கிளப்ப இதற்கு நானே காரணமென கருதி என்னை அலைபேசியில் மிரட்டினர். உன் சம்பந்தப்பட்டவர்களை நான் என்ன செய்கிறேன் பார் என்ற சவால்கள் குவிந்தன. அந்த மாதத்திலேயே முதல் வாயிதா போடப்பட்டது. என்னை காரைக்குடியிலே வைத்து பிடித்து வேறொரு வழக்கு போடுவதற்கு தேவையான வேலைகள் அரங்கேறி விட்டது... நீ வராதே என்று காவல் நிலையத்திலிருந்து செய்தி கிடைக்கவும் நான் அந்த வாயிதாவை புறக்கணித்தான். அதே போல் என் நண்பர்கள் நீதி மன்றம் செல்லும் போது வழிமறித்த ஏழு காவலர்கள் " எங்கேடா அவன்? எங்கேடா அவன்? என்று ஒரு பதட்டத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். எனக்கும் போன் செய்து " ஏனடா வரல ? என்று கோபப்பட்டவர்களின் மானத்தை வாங்கிய கையேடு அண்ணாத்துரைக்கே பேசினேன். அதை அவர் மறுத்தார். அங்கே வந்த ஆறு பேரும் காவல்களா இல்லை கூலிப் படையினரா என்று சந்தேகம் உள்ளதாக நண்பர்கள் தெரிவித்ததையும் இங்கே சொல்ல வேண்டி உள்ளது.

இங்கே நடந்த சூழலை முழுவதுமாக விளக்க முடியாத சூழலில் தற்போது நடக்கும் சதிகளை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். சென்ற 9 ம் தேதி நான் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்று வந்த போதும் அடுத்த மூன்று நாளில் போடப்பட்ட வாயிதாவிற்கு ஆஜராகும் சூழல் இல்லாமல் போனது. அதை சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு அறிவித்த போதும் எந்த தொடர்பும் இல்லாதவர் போல தனது நிலையை நிருபித்துள்ளார். ஆகவே எந்த மனுவும் நீதிமன்றம் பெறப்படாததால் பிடி வாரென்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. நான் தற்போது ஈடு பட்டுவரும் முக்கிய விளைவுகளை சீர்குலைக்கும் செயலில் காவல்துறையினர் முயல்வதும் அதற்கேற்றவாறு வழக்கறிஞர் நடந்து கொண்டமையும் அவர் மீது நம்பிக்கையின்மையை ஏற்ப்படுத்தி உள்ளது. மேற்கொண்டு இது தொடர்பாக வேண்டிய ஆவணங்கள் செய்துவருக்றோம்" என்று தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger