தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவருக்கு 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் எதிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை அன்னயாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஆஞ்சநேயனுக்கு கடந்த 2008ம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அன்னயாவின் தந்தை பெரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் ஆஞ்சநேயனின் 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மேலும் ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் முன்பே கூறிவிட்டாராம். ஆனால் அனன்யா தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்.
2வது மனைவியாக அவர் தயாராக இருந்தாலும் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், இதனால் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Post a Comment