கொலிவூட்டின் முன்னணி இயக்குநர் ஒருவர் சிம்புவுடன் இணைந்து நடிக்குமாறு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோடம்பாக்கத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.பிரபுதேவாவுடனான காதல் முறிவடைந்ததால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. தற்போது இயக்குநர் விஷ்ணுவர்த்தன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதைனையடுத்தே நயன்தாராவை சிம்புவுடன் சேர்ந்து நடிக்குமாறு முன்னணி இயக்குநர் ஒருவர் நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுறது.
ஒஸ்தி திரைப்படத்தில் நயன்தாராவை சிம்புவுடன் நடிக்க வைக்க எடுத்த முயற்சிகள் வீணாகிவிட்டன. ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் நடிக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இயக்குநர் நம்பிக்கையுடன் உள்ளாராம்.
இயக்குநரின் நம்பிக்கை நியாயம் என்பது போல " நயன்தாராவோடு மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? " என்ற கேள்விக்கு அவரோடு நடிப்பதற்கு தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றும், கதைக்காகத் தேவைப்பட்டால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.
Post a Comment