'ஒய் திஸ் கொலவெறி' புகழால் தனுஷ்ஷை விளம்பர மாடலாக்க பிரபல நிறுவனங்கள் போட்டாப்போட்டி!3 திரைப்படத்திற்காக 'ஒய் திஸ் கொலவெறி' பாடலைப்பாடி உலகப் புகழ் பெற்ற நடிகர் தனுஷை தங்கள் நிறுவனத் தயாரிப்புகளுக்காக விளம்பர மாடலாக்கும் திட்டட்துடன் பிரபல நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன.இமாமி நிறுவனம் தனது பிரபல பிராண்டான நவரத்னா குளிர்ச்சி எண்ணெய்க்காக 3 திர்டைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெறும் காட்சியில் விளம்பரத்தை நுழைக்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல் மற்றொரு கேசப்பரமாரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்து வரும் பாராசூட் புகழ் மாரிக்கோ நிறுவனமும் தங்களது அட்வான்ஸ்டு கூலிங் எண்ணெயை விளம்பரப்படுத்த தனுஷ்ஷை அணுகிவருவதாக மும்பையிலிருந்து வரும் வணிகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கேச எண்ணெய் சந்தையின் மதிப்பு சுமார். ரூ.3000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்தையில் சுமார் 50% பங்குடன் இமாமியின் நவரத்னா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
Post a Comment